பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 1

அணிவதில்லை. (கோபால கிருஷ்ண கோகலே அடிகளின் அரசியல் குரு. அவர் இறந்தபோது, ஒராண்டு செருப்பணிவ தில்லை என்று அடிகள் உறுதி பூண்டிருந்தார்.)

அவ்வழி வயற்புறமாக இருந்ததால், அடிகளின் காலில் முட்கள் தைத்தன: குருதியும் கொட்டிற்று. ஆல்ை அடிகள் தம் பயணத்தை நிறுத்தவில்லை. உடனே அவ்வூர் மக்கள் தம் செயலுக்காக வெட்கி, அடிகளை உங்து வண்டி பில் ஏற்றி அடுத்த ஊரில் சேர்த்தனர்.

& *

ஒருமுறை குஜராத்தி கலைமன்றத்தில் அடிகள் பேச வேண்டி யிருந்தது. அடிகளின் ஆசிரமத்திலிருந்து அம் மன்றம் இரண்டு கல் தொலைவில் அமைந்திருந்தது. ஆனல் குறிப்பிட்ட காலத்தில் மன்றத்தினர் வண்டி எதுவும் அனுப்பவில்லை. கூட்டம் துவக்க இன்னும் கால் மணி கேரமே இருங்தது. அடிகள் உடனே கால்நடையாகப் புறப்பட்டு விட்டார். “நாம் குறிப்பிட்ட நேரத்தில் போய்ச் சேருகிருேமோ இல்லையோ; அது வேறு விஷயம். ஆனல் குறிப்பிட்ட காலத்தில் புறப்பட்டு விட வேண்டும்” என்பது காங்தியடிகளின் கொள்கை.

காங்தியடிகள் பாதிவழி சென்றுகொண்ருருக்கும் போது, அவருக்குத் தெரிந்த ஒரு மனிதர் எதிரில் மிதி வண்டியில் வங்துகொண்டிருந்தார். உடனே அம்மனித ரிடம் மிதிவண்டியைச் சிறிதுநேரம் இரவல் கொடுக்குமாறு கேட்டார் அம்மனிதர் மிகவும் வியப்படைங்தவராய், மிதி வண்டியை அடிகளிடம் கொடுத்தார். அடிகளும் மிதி வண்டியூர்ந்து குறிப்பிட்ட காலத்தில் கலைமன்றத்தை யடைந்தார். இடையில் கட்டிய ஒரு முழத்துண்டோடு, திறந்த மேனியராய் அடிகள் மிதிவண்டியூர்ந்து வந்த காட்சி எல்லோரையும் திகைப்பிலாழ்த்தியது. ஏனென்றால் அடிகள் மிதிவண்டியூர்ந்து சென்ற காட்சியை இங்திய