பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

காங்தியடிகளுக்குத்தானே கொண்டு வந்திருக்கிறீர்கள்? எனக்கல்லவே? பிறகு ஏன் என்னைப் பேசச் சொல்லுகிறீர்! உங்களுக்குத் தெரியும், பாபு ஒரு பனியா என்று பனியாக் கள் எப்பொழுதும் பேராசைப் பிடித்தவர்கள் ! இவரைப் பாருங்கள்! இவ்வளவு மெலிந்த நிலையிலும், இருமலிலும் உங்களை ஏமாற்றுவதற்காக, எவ்வளவு சீக்கிரம் புத் துணர்வு கொண்டவர் போல் காணப்படுகிறார். (கூடி இருந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தனர்) நான் இப்பொழுது உங்களே வேண்டிக்கொள்வது ஒன்றே ஒன்று. அவரைத் தனிமையில் விட்டுவிடுங்கள். ஒய்வு பெறட்டும்!” என்று கூறினர் படேல்.

  • ug:

1934-ஆம் ஆண்டு காங்தியடிகள் மேற்கொண்ட வர லாற்றுப் புகழ்பெற்ற உண்ணுவிரதத்திற்குப் பின், அரி ஜன் நிதிக்காக அவர் தமிழ்நாட்டிற் ஒரு சுற்றுப்பிர யாணத்தை மேற்கொண்டார். கேரளாவில் தம் சுற்றுப் பய ணத்தை முடித்துக்கொண்டு, திருநெல்வேலி மாவட்டம் வங்தார். திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டுத் துரத்துக் குடியை அடைந்தார். மாலகேரம் ; இருட்டிவிட்டது. கூட்டம் நடக்கும் இடத்தை அடிகள் அடைந்தார். மேடை மிகவும் அலங்காரமாக அமைக்கப்பட்டிருந்தது. வண்ண விளக்குகள் நாற்புறமும் ஒளிவீசின. அவற்றைக் கண்டு அடிகள் மிகவும் மகிழ்ந்தார். உடனே அவர் பனியா உள்ளம் விழித்துக் கொண்டது. அருகிலிருந்த டாக்டர் தி. சே. செள. இராசனே கோக்கி, ‘இவ் வலங்காரங்களெல் லாம் எப்பணத்திலிருந்து செய்யப்பட்டுள்ளன? அரிஜன நிதியிலிருந்தா?” என்று கேட்டார்.

‘அவ்வாறு இருக்கமுடியாது. யாரோ ஒரு காண்டி ரேக்டர் இச் செலவை விருப்பத்தோடு ஏற்றுக்கொண்ட தாகக் கூறினர்கள்” என்று இராசன் குறிப்பிட்டார். காந்தியடிகளின் உள்ளம் திருப்தியடையவில்லை. அதன்