பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 |

காட்சிகள் பெரும் ஏமாற்றத்தை அளித்தன. புகழ்பெற்ற காசிவிசுவநாதர் கோவிலுக்குச் செல்லும் வழி ஒரு குறுக லான சந்து. கோயிலைச் சுற்றியும், கோயிலுக்குள்ளும் அமைதி என்பதே கிடையாது. தங்திரசாலிகளான கடைக் காரர்கள் மிட்டாய்களும், புதுமையான விளையாட்டுக் கருவிகளும் விற்றார்கள். கடைக்காரர்களும், கடைகளில் சாமான்கள் வாங்கிய பிரயாணிகளும் ஏகச்சத்தம் போட் டார்கள். எங்கு பார்த்தாலும் ஈக்கள் மொய்த்திருந்தன. உளமொன்றி இறைவனை வழிபட அது ஏற்ற இடமாகவே இல்லே. இவ்வளவு சங்தை இரைச்சலிலும் மெய்மறந்து இறைவழிபாட்டில் மூழ்கியிருந்த ஒருசிலர் காணப்பட்ட னர். ஆனல் மிகப் பெரும்பாலோருக்கு அது முடியாத தாயிருந்தது. கோயில் வாயிலை அடைந்ததும் அழுகிப் போன பூக்குவியலின் காற்றம் காங்தியடிகளுக்கு கல்வரவு கூறியது. கோயிலின் உட்புறம் நல்ல சலவைக் கல்லால் தளவரிசை போடப்பட்டு விளங்கியது. ஆனல் யாரோ ஒரு பக்தர் அங்தச் சலவைக் கற்களே நடுநடுவே உடைத்து ஆங் காங்கு வெள்ளி ரூபாய்களைப் பதித்திருந்தார். இங்த ரூபாய்கள் அழுக்குச் சேரும் துய்மையற்ற பாண்டங் களாக விளங்கின.

கோவிலச் சேர்ந்த ஞானவாவி’ என்ற புனித நீர்த் துறைக்குச் சென்றார்கள் அடிகள். ஞானவாவியைச் சுற்றி யும்கூட ஒரே ஆபாசமும் அழுக்கும் படிந்திருந்தன காங்தி யடிகட்கு இவையெல்லாம் மிக்க ஆத்திரத்தை அளித்தன. அந்த ஆத்திரத்தை வாவிக் கடையில் அமர்ந்திருந்த பண்டாவிடம் காட்டினர் : (கோயிற் குருக்களின் வேலை யும், புரோகிதர் வேலையும் சேர்த்துச் செய்கிறவர்களுக்குப் “பண்டாக்கள்’ என்று பெயர்) பண்டாவுக்குத் தட்சணை கொடுக்க இவருக்கு உள்ளம் இணங்கவில்லை. இதற்கு அறி குறியாக ஒரு தம்பிடி கொடுத்தார்.