பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

சுற்றுப் பயணம் கடத்தினர். அடிகளின் தீண்டாமை ஒழிப்புக் கொள்கையை விரும்பாத சனதன இந்து இளைஞர் கள் பலர், சுவாமி லால்காத் என்ற துறவியின் தலைமையில் ஒன்று கூடிக் காங்தியடிகளைப் பின்தொடர்ந்து சென்றனர். அடிகள் புகை வண்டியில் சென்ற போதும், பொதுக் கூட்டங்களில் பேசிய போதும், தங்களுடைய சுலோகங் களே உரக்கக் கூறிக் கலகம் செய்தனர். அடிகள் ஆஜ்மீர் நகரில் பொதுக் கூட்டத்திற்காகப் புறப்பட்டுக்கொண் டிருந்த சமயத்தில், யாரோ ஒருவர் சுவாமி லால்காத்தைத் தலையில் அரிவாளால் வெட்டி விட்டார். படுகாயமடைந்த சுவாமியைத் தொண்டர்கள் காங்தியடிகளிடம் சுமங்து வங்தனர் சுவாமிகளின் காயத்திற்கு வேண்டிய முதலுதவி களேயெல்லாம் காங்தியடிகள் செய்தார். பிறகு தம்முடைய பாதுகாப்பின் கீழேயே சுவாமிகளே வைத்துக் கொண்டு மருத்துவம் செய்தார். பிறகு கராச்சிக்குப் புறப்பட்டார். லால்காத்தும் அடிகளுடன் மார்வார் புகை வண்டிச் சங்திப்பு வரையிலும் சென்றார். காங்தியடிகள் லால் காத்தோடு உரையாடல்கள் நிகழ்த்தினர். அவருடைய கொள்கைகளைப் பொறுமையுடன் கேட்டார். தம்முடைய கொள்கைகளையும் விளக்கிச் சொல்லி, அன்பால் அவர் உள்ளத்தை வெண்ருர்.

 $

பாகிஸ்தானும் இந்திய யூனியனும் தனித் தனியே பிரிக்கப்பட்டு விட்டன. அச்சமயத்தில் இந்து முஸ்லீம் கலகமானது உச்ச நிலையில் இருந்தது. ஆயிரக்கணக்கான இந்துக்களும் முஸ்லீம்களும் தில்வி, நவகாளி, பஞ்சாப் ஆகிய இடங்களில் படுகொலை செய்யப்பட்டனர். நூருயிரக் கணக்கான அகதிகள் இ ங் தி ய | ர .ெ ட ங் கி லு ம். சுற்றியலைந்து கொண்டிருந்தனர். கற்பழிக்கப்பட்ட கன்னிப் பெண்களின் கண்ணிர், சிங்து, கங்கை நதிகளின் வெள்ளப் பெருக்கோடு கலந்து ஓடியது. மகாத்மா கலகம்