பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

உள்ள கிளர்ச்சிக்காரர்கள் நாளே உமக்குத் துன்பம் விளைவித்தால் அமைதியோடு அவைகளே ஏற்றுக் கொள் வீரா? துன்பம் செய்தவர்களே மன்னிப்பீரா?’ என்று பல கிருத்தவர்கள் அடிகளைக் கேட்டனர்.

“கட்டாயம் அவர்களே மன்னிப்பேன் எனக்குத் துன்பஞ் செய்தவர்களுக்கு எதிராக ஒரு சுடு சொல் கூடக் கூறமாட்டேன். அவர்கள் மீது வழக்குத் தொடரமாட் டேன். இவற்றில் சிறிதேனும் நீங்கள் ஐயப்படவேண்டாம்’ என்று அடிகள் ஆணித்தரமாக விடையிறுத்தார். அடிகள் தாம் கூறிய இச் சொற்களே உண்மைப்படுத்த வேண்டிய வாய்ப்பு அவருக்காகக் காத்துக்கிடங்தது.

கோர்லாண்டு கப்பலில் மஞ்சள் கொடி இறக்கப் பட்டது. கப்பல் டர்பன் துறைமுகத்திற்குள் புகுந்தது. ஆற்றாமையோடு கப்பலில் அடைந்திருந்த பிரயாணிகள் யாவரும் ஆவலோடு கரையில் இறங்கினர். கேடால் அரசாங்கத்தின் அட்டர்னியும், அடிகளின் நெருங்கிய கண்பருமான திருவாளர் எஸ்கோம்பு என்ற வெள்ளேயர் “இங்குள்ள வெள்ளேயர்கள் உங்கள் மீது தனிப்பட மிகவும் சினங் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பகலில் இங்கு இறங்கி வந்தால் துன்பத்திற்கு ஆளாக வேண்டி வரும் எனவே இரவில் வருவதுதான் கல்லது’ என்று காங்தியடிகளுக்குச் செய்தியனுப்பினர். காங்தியடிகளும் அதன்படியே செய்ய எண்ணினர் ஆல்ை அரை மணி நேரத்திற்குப் பிறகு, தென்னப்பிரிக்க இந்தியரின் வழக்கறிஞரான திருவாளர் இலாப்டன் என்பவர் காங்தி யடிகளைக் காண்பதற்காக வந்தார். அவர் அடிகளைப் பார்த்து, “நீங்கள் இருட்டிய பிறகு வீடு திரும்பும் யோசனை எனக்குப் பிடிக்கவில்லை. திருடனைப் போல் இருட்டில் ஏன் நீங்கள் செல்ல வேண்டும்? நீங்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இப்பொழுது டர்பனில் கிலேமை சீர்திருந்திவிட்டது; கிளர்ச்சிகள் அடங்கி விட்டன