பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 காந்தியத் திட்டம் வைத்தியசாலைகளும் குடிசை - மருந்துச்சாலைகளும்-நோய் பரவாமல் தடுப்பதற்கு கல்ல வசதிகளோடு கூடிய அதிகமான வைத்தியசாலைகளே நகரங்களில் அமைக்க வேண்டும் ; கிராமாந்தரங்களில் ஏராளமான குடிசை - மருந்துச்சாலைகளே அமைக்க வேண்டும். இந்த விஷயத் திலும் லோவியத் ரஷ்யா வழிகாட்டி யிருப்பதால், அதைப் பின்பற்றுவது நலம். இந்தியாவில் வைத்திய சாலைகளும் மருந்துச்சாலைகளும் சுமார் 7,000 கான் இருக் கின்றன. தொழில் நடத்திவரும் டாக்டர்களின் எண் ணிக்கை சுமார் 42,000 என்று கணக்கிடப்பட்டிருக் கிறது ; அதாவது 9,000 நபர்களுக்கு ஒரு டாக்டர் இருக்கிரு.ர். ஜப்பானின் ஜனத்தொகை அநேகமாக வங்காளத்தின் ஜனத்தொகையைப் போன்றதுதான் ; ஆயினும் அங்கே இந்தியா முழுவதிலுமுள்ளதைவிட அதிக டாக்டர்கள் இருக்கின்றனர். ஜனத்தொகையில் 2,000 பேருக்கு ஒரு டாக்டர் விதம் கணக்குப் பார்த்தாலும், இந்தியாவுக்கு 2,00,000 டாக்டர்கள் தேவை. 86,000 நபர் களுக்கு ஒரு தாதி (நர்ஸ்) விதம், இந்தியர்வில் மொத்தம் 4,500 தாதிகளே இருக்கின்றனர். பிரிட்டனுடைய ஜனத்தொகை இந்தியாவிலுள்ளதில் எட்டில் ஒரு பங்கா யிருந்த போதிலும், அங்கே 1,09,500 தாதிகளும், 61,420 டாக்டர்களும் இருக்கின்றனர்; அதாவது, 455 நபர் களுக்கு ஒரு தாதி வீதமும், 776 நபர்களுக்கு ஒரு டாக்டர் விதமும் இருக்கின்றனர். எனவே, நர்ஸ்களுக்கும் டாக்டர் களுக்கும் பயிற்சி யளித்தல் மிக அவசரமான வேலே , கிராமாந்தரங்களின் தேவைகளே விசேஷமாகக் கருத்தில் வைத்துக்கொண்டு, இந்த வேலையை இந்தியக் தேசிய சர்க்கார் மிகுந்த சிரத்தையுடன் நிறைவேற்றி வைக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு மருந்துச் சா8ல இருக்க வேண்டும் , அது பஞ்சாயத்தின் கிர்வாகத் திலும், மாகாண சர்க்காரின் மேற்பார்வையிலும் இருந்து வரவேண்டும். சிகிச்சை முறைகள்-இந்தியாவில் வைக்கிய வசதிகளே _அபிவிருக்கி செய்வதில் இம்காட்டுக்குச் சொந்தமான