பக்கம்:கானகத்தின் குரல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜக் லண்டண் i ன்

  • - *

நூல்களையெல்லாம் அவர் ஆர்வத்தோடு படித்தார். ஒன்றிரண்டு ஆண்டுகளில் இலக்கிய வானி ரட் யார்டு கிப்ளிங் புகழோடு Gគ្រឹះ مشية j அவரிடத்திலே ஜாக்குக்கு ஆர்வம் நிறைந்த பற்றுதல் ஏற்பட்டது. அந்தப் பத்துதல் அவருடைய வாழ்க்கை முழுதும் நீடித்திருந்தது. ஜாக் லண்டன் எப்பொழுதும் புத்தகமும் கையுமாக மட்டு இருக்கமாட்டார். காலையிலும், மாலையிலும் அவருக்கு வேலையுண்டு. பள்ளிப்படிப்பு முடிந்ததும் அவருக்குத் தம் உள்ளத்தைக் கவர்ந்த கடலின் மேற்செல்ல அவகாசம் கிடைத்தது. சான்பிரான்சிஸ்கோ வளைகுடாவில் பதினான்கடி நீளமுள்ள ஒரு தோணியைச் செலுத்துவதில் அவர் பெரும்பொழுதைக் கழித்தார். அந்தச் சமயத்தில்தான் அவருக்குப் புதிய சிநேகங்கள் ஏற்பட்டன. பதினான்குவயதுச்சிறுவன் ஒருவனும், அபினியைத் திருட்டுத் தனமாகக் கடத்துகின்ற ஒருவனும் திமிங்கல வேட்டைக்காரன் ஒருவனும் அவருடைய உள்ளத்தைக் கவர்ந்தார்கள். விரைவில் அவர் பொருள் தேடி உழைக்க வேண்டியதாயிற்று. தகர டப்பிகள் செய்யும் தொழிற்சாலையொன்றில் அவர் பல மாதங்கள் வேலை செய்தார். எந்திரங்களுக்கு அடிமையாக வேலை செய்வது அவருக்குப் பிடிக்கவில்லை. அந்த வேலையிலே கற்பனையில்லை; துணிகரமான செயல்களுக்கு இடமில்லை; ஆர்வத்தை வளர்ப்பதற்கு துண்டுகோல் எதுவுமில்லை. அதனால் தொழிற்சாலையும் அந்தத் தொழிற்சாலையை ஒர்.அங்கமாகவுடைய வாழ்க்கைமுறையையும் அவர் வெறுக்கலானார். அவர் அந்த வேலையை விட்டுவிட்டு ஆளிச்சிப்பிகளைக் (Cyster கொள்ளையடிப்பதில் ஈடுபட்டார். அவர் தமது நீக்ரோசெவிலித்தாயிடம் முன்னூறு டாலர் கடன்வாங்கி அதைக்கொண்டு ஒரு ஒற்றை பாய்மரக்கப்பல் வாங்கினார். அதில் ஏறிச்சென்று சான்பிரான்சிஸ்கோ வளைகுடாவில் ஆளிச்சிப்பிகள் பெருகி வாழும் இடத்திற்குச் சென்று அவற்றைக் கொள்ளையடிக் கலானார். அப்போது அவருக்கு வயது பதினாலு. கப்பலைச் செலுத்துவதிலும், சண்டையை எதிர்த்து நிற்பதிலும் வல்லவராக இருந்தார். துறைமுகத்திலுள்ள உணவு விடுதிகளில் சுற்றித்திரிபவர்களும், சிறிய படகுகளில் ஏறி வளைகுடாவில் செல்லுகின்ற மாலுமிகளும், குற்றவாளிகளும் அவருடைய தோழர்களாயிருந்தார்கள். இப்படிக் கொள்ளை அடித்து வாழும் வாழ்க்கையில் அவருக்கு விரைவில் சலிப்பு ஏற்பட்டுவிடவே ஜாக் திடீரென்று மீன்காவற்படையில் சேர்ந்து கொண்டார். அப்படிச் சேர்ந்துகொண்டு முன்பு அவர்தாம் செய்ததுபோலக் கொள்ளை