பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21.

ஏழு பீரங்கி தலை கீழாய் நிறுத்தி

ஏராளமாய்ச் சல்லி வாரியதிற் போட்டு முழக்கி யக்கினி மாரி போலே வைத்து

முழுக்கினான் குமுகுமெனப் பீறங்கி வேட்டு மேலாடி பாளையம் நெளிக்க காணு

விழிதி வந்து சாராயப் பீப்பாயைத் திறந்து காலால்கள் சோல்தார் படைக்கு அப்போ கண்டபடி கொடுத்திட்டா னொவ்வொரு கிளாசு சாராய வெறி கொண்டு ஜனங்கள் நிற்க

தாங்காமல் நடவென்று சாத்தினான் பிரம்பால் பூராயமாய்ப் பட்டாளத்தை நடத்தி கானன்

புகழ் பறங்கிமலைக் கோட்டை மதிலோரம் வந்து ஏணிமர மெழுநூறு சாத்தி ஜனத்தை

யேற்றிய பிரம்பாலே சாற்றினான் காணன் அணியணியாய் சிப்பாய்க ளேற முசாபர்

அக்கனி போல் கண்சிவந்து கொப்பாறை தன்னில் மூவாயிரந் துலாமீயங் காய்ச்சி அப்போ

முழுயிருப்பு கரண்டியால் சிப்பாய்கள் மேலே காவலர்கள் வாரி யிறைத்திட்டார் அதைக்

கண்டவுடன் சிப்பாய்கள் தலைகீழாய் விழுந்து நெளித்தோடக் சோல்தார் சினந்து அதட்டி

நெறுநெறன் றடர்ந்தேறிக் கோட்டை மேற்கொண்டு முழித்துப் பாராமற் கோட்டையின் மேல் நின்று

மூன்று பளித்தா தீர்த்துள ஆணுதலையாக சீறிய கோட்டைக்குள் குதித்தார் அப்போ

சிப்பாய்கள் பட்டாளம் பின்தொடர்ந் தேறி ஏறிய கோட்டைக்குட் குதித்து வந்து

எதிரிட்ட முசுப்பரைக் கைப்பிடியாய் பிடித்து முசுபர்தனைப் பறங்கிமலைக் கோட்டை தன்னில்

முதல் வெட்டு பட்டாவால் வீசின.பின் காணன் வசும்பாகத் தைனாத்து வைத்து பாளையத்தை

வளைத்துப்போய் தக்கோலம் பேராம்பூர் பிடித்து நெல்லூர் சிராப்பளியும் பிடித்து கானு

நேராக ஆற்காடு வீதிதன்னில் வந்து

மாஷாவைக் காணுதல் மல்லுரு ஆற்காடு தன்னில் பறைச்சி

மாசாவைக் கண்ணாலே கண்டானே கானன்

21. முசாபர் கோட்டை அதிகாரி.