பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மாசாவைக் கண்டு மயலாகி நல்ல

மதனதுரை கான்சாயபு ஆள்விட்டுப் பேசி மாசாவை கல்யாணஞ் செய்தான் அப்போ

மதுராபுரிக் கோட்டைக்கு வந்ததடா யோகம் திரும்பினான் ஆற்காடு வெளியில் கானன்

செயங்கொண்டு வரக்கண்டு சீரான துரைமார் விரும்பியே சந்தோஷ மாகி துரைமார்

வீரான மதுரைக்கும் தானென்று" சொன்னான் மதுரைக்கு அனுப்புதல் அதுசேதி யர்க்காருஞ் சொல்ல அப்போ

அதிவீரமம் முதலிநபாபு துரை சொல்வான் சதுர்முகனே துரைபெரிய பிரட்டா நான்

தானாக வொருசேதி சொல்லுகிறேன் கேளு கும்தான் கலகமொரு பக்கம் பிரட்டர்

கூகுசாயபு கலகமோ சொல்லக் கூடாது வர்மமாய் மயலாடிக் கள்ளர் - பயமும்

மகமதியர் கலகமும் சொல்லப் போகாது மறவர் குடி பெருத்த தந்தத் தேசம் அந்த

மதுரைக் கனுப்பினால் மோசம்வரு மென்றான்

பிரிட்டன் - நவாபு உரையாடல் திறமிகும் துரைபெரிய பிரட்டன் நவாபு

தேவடியிலே யிருந்தேது சொல்ல லுற்றான் பன்னிரண்டு வருஷங்க ளாச்சு அந்த

பாண்டியன் பதிசீமை தன்னரசு விட்டு இனி நமது கானுதனை யனுப்பி சீமை

யெல்லா மடக்கியொரு குடைக்கீழ் நிறுத்தி வடக்கே வந்து பயணஞ் சேரும்படியாய் இவனை

மதுரைக் கனுப்பினால் வசமாகு மென்றான். திடமாக மம்முதலி சாய்பு அப்போ

சிந்தை தனிலெண்ணி யாலோசனை பண்ணி புவன மெல்லாம் புகழ்பெரிய பிரட்டன் நல்ல

புலிக்குட்டி பாபுநான் சொல்கிறேன் கேளு இவனை மதுரைக் கனுப்பி வைத்தால் நாளை

யெதிராளி யாவானே திருச்சினாப் பள்ளிக்கு

22. மதுரைப் பகுதி மதுரை என்றழைக்கப்பட்டது. அங்கு பாளையக் காரர்கள் நவாபுக்கு அடங்கியிருக்கவில்லை. அந்த நிலைமையைக் கூறி, அவர்கள் நவாபு ஆட்சியை ஒப்புக்கொண்டு, வரி கட்டுமrது செய்ய படையோடு கான்சாகிபை, மதுரையிலேயே கமாண்டராக இருக்கச் செய்ய வேண்டும் என்று பிரிட்டன் சொல்லுகிறான்.