பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

கானனை யனுப்ப வேண்டாமென்றார் அப்போ

கர்னல் துரைபிரட்டன் நவாபைப் பார்த்து நான் வளர்த்த பிள்ளையந்தக் காணன் சாயபு

நம்மோ டெதிர்த்தவன் சண்டைக்கு வந்தால் எண்ணி எட்டு நாளைக் குள்ளாக நெருப்பா யெரித்துநான் மதுராபுரி பிடித்திடுவே னென்றான் புண்ணிய நவாபுதுரை பார்த்து பிரட்டாவுன்

புத்திக்குச் சரியானபடி யென்று சொல்ல கானுதனை பக்கத்தி லழைத்து நவாபு

கனமாகத் தாம்பூலங் கையில் கொடுத்து நானும்உனை யனுப்புகிறேன் தெற்கே எனக்கு

ரண்டகஞ்’ செய்யாதே யென்றார் நவாபு கானனு மனது மகிழ்வெய்த பிரட்டன்

கன பிரியமாக யேது சொல்வானாம் காயிதங் கைதனிலே கொடுத்து சாமி

காரியங் கண்ணாகப் பார்த்துவரச் சொல்லி நேயமுடன்நட மதுரைக் கென்று பிரட்டன்

நிசவுறுதியாய்ச் சொல்லி அரண்மனை போய்ச்சேர்ந்தான்

மதுரைக்குப் பயணம்

சேர்ந்தவுடன் கானுதுரை தானும் பிரட்டன்

திடவுறுதி சொன்னபின் வெளியிலே வந்து மாசாவைக் காடியின் மேலேற்றி சேனை

மருங்கில் நெருங்கிவரக் குதிரை மேலேறி ஆசார வாசல்வரு தாண்டி நல்ல அழகான சென்னைபுரி கோட்டை வெளிதாண்டி திருச்சினா பள்ளி கோட்டை தாண்டி காணு

செயனா மங்கலம் விராலிமலை தாண்டி வரிசையாய் மணப்பாரை கடந்து தோகை

மலைதாண்டி நம்மன் குரிச்சியி லிறங்கி நம்மன் குரிச்சிப் பூச்சியனை யழைத்து க:னு

ராஜாதி பதியவனு மேது சொல்வானாம். கமையாக உனது பெரும் சேனை தன்னில்

கள்ளர் பயமேதடா காடுவழி தன்னில் இராப் பகலாய் பாளையம் வருது இனி மல்

இவ்விடந் தன்னில் களவு நடந்துதே யானால் தப்பாக நீயிருக்குந் தேசம் எல்லாத்

தவிடு பொடியாக்கி ரணதுளி யாயடித்து

23. ரண்டகம் துரோகம்