பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.

எவைெவ னிருந்தாலும் பாரேன் உன்னை

ஏழுமலைக் கப்பாலே விரட்டு வேனென்று அவனைப் பயப்படுத்தி வழிபதனம் என்று

அதட்டி வலுவாகி நடந்திட்டா னப்போது

துவரங் குருச்சியது தாண்டி உயிர்

தோகக்குருச்சி யெனுநத்தம் வந்து சேர்ந்து நத்தத் துலிங்கனை யழைத்து கானு

நலமான வொருசேதி திடமாகச் சொல்வான் கள்ளர் பயமிக் காட்டில் மெத்த வென்று

கனமான நபாபுதுரை சொன்னாரடா பாவி எவ்வளவு பாதை வழிதனிலே லவுண்டி

இனிமேலும் பாதையிலே கள்ளர்பய மானால் எட்டு நாளையில் கச்சைக் கட்டி உன்னை

ஏலேலோ தூக்கிலே போட்டிடுவேன் கள்ளா மட்டுள்ளவழி பதை பதனம்’ என்று

மன்னன் வருகிறான் திசைமதுரை நோக்கி அழகர்மலைக் கொம்மையுந் தாண்டி நல்ல

அழகான தேனூர் மைதான வெளிதாண்டி தளம் பெரிய நால்சேனை சூழ நல்ல

செளரிய முடனேநல் குளமதி லிறங்கி கொடி முரசுதம் பீரடிக்க நல்ல

கோட்டைமிடு தனது வைப்பட்டாளஞ் சூழ துடியாக வானமுக டதிர நல்ல தோகையர்கள் நடனமிட வெண்கவரி வீச - தம்பினிமுரசு வெள்ளைக் காரர் தளமும்

கூட்டி மதுராபுரியில் ஒயிலாகச் சேர்ந்தான் இப்புவி யெலாஞ் செவிடுபடவே பீரங்கி

இருபத்தொரு வேட்டு தீர்த்தார் நகர்தன்னில் கோடைகாலத் திடிகள் போலவே வைத்துக்

கொளுத்தினான் பீரங்கி சொல்லக் கூடாது வாடாமலர் மதுரை நகர்தன்னில் வாழும்

மதிகூடு சாயபு அவன் ஏறிட்டுப்பார்த்து பேசியிந் நகர் போச்சு தென்று தனப்

பெருக்குடனே திருச்சினாப்பள்ளிக் கோட்டை சேர்ந்தான் மதயானை கானுதுரை சாயபு கோட்டை

மதுராபுரி யலங்க மீதுநின்று பார்த்தால் கதையான மதுராபுரிக் கோட்டை தன்னில்

சூன்யமும் வீரியமுஞ் சொல்ல முடியாது

24. வருகிற வழியிலுள்ள பாளையக்காரர்களிடம் கள்ளர்களது கொள்ளை

நடவடிக்கைகளை அடக்கச் சொல்லுகிறான்