பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

தேங்காய் தண்ணீரிலை மோதும் துய்ய சிறுமல்லிகைப் பூ.சொரியுந் திசைமதுரைக் கோட்டை மாங்காய் காய்த்துக் குலையுதிரும் நல்ல

மங்கையர்கள் பந்தடிக்கும் மணிமதுரை வீதி வெள்ளானை விளையாடும் மதுரை நல்ல

வெண்கதலிக் குலை நெருங்குமிக மதுரைக் கோட்டை வெள்ளமிர்தம் சொரியும் திசைமதுரை நீண்ட

வீதிக ளெல்லாம் கதம்ப வாசமது வீசும். மந்தாரை முல்லை யிருவாட்சி செண்பக மலர்சொரிந்து தேனொழுகு மணிமதுரைக் கோட்டை நந்தாதி மதிமணி மேடை வீதி நல்ல

நவமணிகள் குவிந்திருக்கும் நல்லமதுரைக் கோட்டை வாழைக்குலை சாய்ந்திடு மதுரை நகரில்

தான்கீதம் பாடி மலர் வாசத்தைத் தேடும் என்பத் திரண்டு கொத்தளமாம் கிணற்றில் எழிலான கடல் குதித்துத் திரிந்து விளையாடும் வழுதிசே ரசிசயங்க ளனைத்தும் வாயால் வழுத்த டியாது மனமகிழ்ந்து பார்த்திருந்தான் இருந்த தொரு கான்சாயபு நீலன் நல்ல

இயல்பாகப் பின்னு மவனேது செய்வானாம் நானூறு பொன்கையில் கொடுத்து அந்த

நாழிகையில் னாகரிக்குச் சிறப்பு செய்யச் சொல்லி' பானுமதி சூல் மீனம்பாள் - பாதம்

பணிந்து சொக்கேசரையும் வலமாக வந்து கர்த்தாக்கள்’ வந்திருக்கு மேடை அந்தக் கருங்கல்லுச் சவுக்கையிலே ஒயிலாகச் சாய்ந்து மீனாட்சி கிருபை களினாலே - நல்ல

வெங்கலக் கதவுதனைப் போர்த்தவ னெடுத்து தீரனெனும் கான்சாகிபு துரைதான் அதிலே

வொருகோடி திரவிய் மிருக்க மனமகிழ்ந்து விஸ்தார அரண்மனையும் கட்டி அதிலே

மேல்வீடு மாளிகையுந் தானுண்டு பண்ணி அரண்மனையில் மகிழ்வாக விருந்து இன்னும்

ஆறேழு நாள்பொறுத்து யோசனைகள் செய்து

25. கான்சாகிபு முன்பு இந்துவாயிருந்தவன், பதவிக்காகவே முஸ்லீம் மதத்திற்கு

மாறியவன்.

26. கர்த்தாக்கள் - நாயக்க மன்னர்கள், இவர்கள் தங்களை விஜயநகர ராயர் ராணுவ காரியகர்த்தாக்களென்று தமது சாசனங்களில் தங்களைப் பற்றிச் குறிப்பிட்டுக் கொள்ளுகிறார்கள்.