பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93. என்னை உடையான்


இறைவனுக்கு உடையான் என்பது ஒரு பெயர். எல்லாவற்றையும் தன் உடைமையாக உடையவன் ஆதலின் அந்தப் பெயர் வந்தது. வடமொழியில் ஸ்வாமி என்று வழங்கும் திருநாமமும் அந்தப் பொருளுடையதே.

எல்லாவற்றுக்கும் ஸ்வாமியாக இருக்கும் அவனை எல்லோரும் அவ்வாறு உணர்வதில்லை. பிரமன், இந்திரன் முதலிய பெரிய தேவர்கள்கூடத் தாங்களே எல்லாவற்றுக்கும் சொந்தக்காரர்கள் என்று எண்ணி இறுமாப்பு அடைவதுண்டு. ஆனால் அடியவர்கள், அவனே எல்லாவற்றையும் உடையவன் என்றும், தமக்கும் அவனே உடையவன் என்றும், ‘நாம் அரன் உடைமை’ என்றும் எண்ணுவார்கள். பொருளை உடையவன் அதனைப் பாதுகாப்பது போல இறைவன் தம்மைப் பாதகாத்தருள்வதாக உணர்வார்கள். இந்தக் கருத்தை நினைக்கிறார் காரைக்கால் அம்மையார்.

என்னை உடையானும்.

வெவ்வேறு குழுவிற்கு வெவ்வேறு தலைவர்கள் இருப்பார்கள். அமரர் குழுவுக்கு இந்திரன் தலைவன். சத்தியலோகத்தில் உள்ளவர்களுக்குப் பிரமன் தலைவன். உலகத்தில் பல பல நாடுகளில் உள்ளவர்களுக்கு அந்த அந்த நாட்டின் அரசன் தலைவன்.

இவ்வாறு வேறுபட்ட குழுக்களுக்கு வெவ்வேறு தலைவர்கள் இருந்தாலும்,எல்லாத் தலைவர்களுக்கும் மேலான தலைவன் ஒருவன் இருப்பான். சிறு சிறு நாடுகளுக்கு ஆட்சி புரியும் மன்னர்கள் வெவ்வேறாக இருந்தாலும் எல்லா மன்னர்