பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டாளி வர்க்க மனிதத்துவம் 101

காட்டி விட்டது.முன்பு தமக்கென அரிச்சுவடி பெருமலும், கல்வி அறிவு இல்லாமலும் அரை குறைக் காட்டுமிராண்டி களாக இருந்த மக்களுக்கு அறிவின் பாதையை அகலத் திறந்து வழி காட்டியவன் ரஷ்யத் தொழிலாளிதான்.

சோவியத் யூனியனில் வாழ்கிறவர்களின் கலாசார வளர்ச்சி வேகம், சகல காடுகளிலும் உள்ள நேர்மையான ஆண் பெண் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை ஒப்புக்கொண்டதும், கேர்மையான ஆண் பெண் அனைவரும் அதிலிருந்து மிகவும் எளிமையான, ஒழுக்க நெறியின்படியும் சரியான ஒரு முடிவை கிரகித்துக் கொள்வார்கள் என்றுதான் யாரும் எண்ணக் கூடும். சமூக நோய்களினல் சாகக்கூடிய வகையில் தாக்கப்பட்டு, அழிவு நிச்சயம் என்ற கிலேயில் இருக்கிற ஒரு சூழலில் வாழ்வதை விட, ஆரோக்கியமான தொரு சூழலில் வாழ்வது, அக நோக்கிலும் புறநோக்கிலும், எவ்வளவோ பயனுள்ளது. எவ்வளவோ யோக்கியமானது என்பதுதான் அக்த முடிவு ஆகும். பாட்டாளி வர்க்கம் புதிய சமுதாயத்தைச் சிருஷ் டிக்கும் சக்தி பெற்றிருக்கிறது என்பதை ஒப்புக்கொண் டதும், அதனுடைய அறிவுத் தாகத்தின் அபிவிருத்திக்கும். அதன் திறமைகளின் வளர்ச்சிக்கும், அதனுடைய சரித்திர பூர்வமான புனிதப் பணி பற்றி (இங்தப் பணி 1? கோடி மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில் ஏற்கனவே தொடங்கி விட்டது) உழைப்பாளி மக்களிடம் உணர்வு பெருகுவ தற்கும் வசதியாக, எல்லாவிதமான ஆதரவுகளேயும் நாம் பாட்டாளி வர்க்கத்திற்கு அளிப்பதுதான் மிகுதியும் பயனுடையதாகும் கலாசாரத்தை முதலாளிகள் மறுத்து வருகிற செயலிலுைம், மனிதப் பிறவிகளே அடியோடு அழிக்கும் கோக்கத்தோடு ஏற்படுத்தப்பட்ட ராணுவ நூல் தவிர்ந்த இதர கலாசாஸ்திரங்களின் முன்னேற் மத்தை எதிர்க்கும் அவர்களுடைய படை எழுச்சியாலும்,