பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

அவனது பத்திரிகை அனுப்பி வைத்தது. இந்தச் சம்ப வத்தை அதன் போக்கிலே விட்டுவிட நான் முற்றிலும் தயாராக இருக்கிறேன் என்பதை அந்த ஆசாமி ஊகித்து அறிந்துகொண்டான். வீராய் ஸ்காட் என்கிற இளம் எழுத்தாளரையும்-தி வாக்கிங் டெலிகேட் (கடமாடும் பிரதிநிதி) எனும் நாவலின் ஆசிரியர் இவர் - ஃபைவ் கிளப்' என்ற சங்கத்தைச் சேர்ந்த அவருடைய தோழர் களையும் இந்த விவகாரத்தைக் கவனித்து ஏதாவது செய் யும்படி அவன் வற்புறுத்தினன். அவர்கள் அவ்விஷயத் தில் எதுவும் செய்ய முடிய வில்லே என்பது பின்னர் தெளி வாயிற்று. ஆயினும், நான் தெருவிலிருந்து கிளப்' கட் டிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். இலக்கிய முயற்சியில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் அந்த இடத்தில் வசித்து வந்தார்கள். வீராய் ஸ்காட்டின் மனைவியான ரஷ்ய யூத மங்கை தான் மனத்தலைவியாகப் பணி புரிந் தாள். கிளப்பின் விசாலமான முன்னறையில் கணப்பின் முன்னல் ஐந்து இளம் எழுத்தாளர்களும் தினந்தோறும் மாலே நேரத்தில் கூடுவது வழக்கம். கிருபர்கள் வந்தார்கள். நான் அவர்களிடம் ரஷ்ய இலக்கியம், ரஷ்யப் புரட்சி, மாஸ்கோ மக்களின் எழுச்சி ஆகிய விஷயங்களைப் பற்றிப் பேசினேன். (போல்ஷ்விக் மத்தியக் கமிட்டியைச் சேர்ந்த என். ஈ. புரெனின், ஸ்காட்டின் மனைவி, எம். எப். ஆண்ட்ரீயீவா ஆகியோர் என் பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொன்னர்கள்.) பத்திரிகைக்காரர்கள் சிரத்தையோடு கேட்டார்கள் குறிப்புகள் எழுதிக்கொண் டார்கள் வருத்தத்தைக் காட்டும் வகையில் பெருமூச் செறிந்தார்கள். 'இதெல்லாம் ரொம்பவும் சுவையாக இருக்கிறது-ஆளுல் இது எங்கள் பத்திரிகைக்கு ஏற்ற விஷயம் அல்ல’’ என்று சொன்னர்கள்.