பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மாக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

இப்பொழுது இல்லையே என்பதற்காக கீ வருத்தப்பட வேண்டாம் - உன் மூஞ்சியில் ஓங்கி அறைந்திருப்பான் அவன். ஆத்திரப்பட வேண்டாம். அவனைப் போன்ற மகா பெரியவனை மகன் ஒருவனின் பலத்த அறை விலைமாது ஆகிவிட்ட உன் போன்ற தாய்க்கு ஒரு கெளர வமாகவே அமையும்...

உன் மகன் ஹ்யூகோ உனது கீர்த்தி முடியில் திகழும் மிக அழகிய மணிகளில் ஒருவனவன். சர்வஜன உரிமை களுக்காகப் போராடியவனும் கவிஞனுமான அவன், மனித உள்ளத்தில் உறையும் சிறப்புகளே எல்லாம் உயிர் பெற்றுச் சுழல வைக்கும் குறைக் காற்றுப் போல, உலகம் எங்கும் தன் இடியோசையை முழக்கினன். பிரான்ஸ்! உன் கையில் சுதந்திரத்தின் கொடி ஏங்தி, உன் இன்முகத் தில் உல்லாச முறுவல் தாங்கி, உண்மையும் நற்பண்பும் நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையின் ஒளி உன் கண்களிலே சுடரிட, மக்களின் முன்னணியில் ே அடி எடுத்து வைத்த காலமெல்லாம், உன் குரல் உலகெங் கும் வீரர்களைக் கவர்ந்திழுத்தது போலவே, அவனுடைய புத்தகங்கள் எங்கெங்கும் வீரர்களேச் செயலுக்கு அழைத் தன. வாழ்வை, அழகை, உண்மையை, பிரான்ஸைக் காதலிக்கும்படி அவன் மனிதர் அனைவருக்கும் போதித் தான். அவன் செத்துப் போனது உனக்கு நல்லது ஆயிற்று. அவன் உயிருடன் இருந்தால், கொடும்பாதகச் செயலேகாலத்தினுல் தலைமயிர் கரைத்து விட்ட போதிலும், ஒரு இளேஞனேப் போல். ஆர்வத்தோடு அவன் காதலித்த பிரான்ஸ்தான் செய்திருக்கிறது என்ருலும்- மன்னித் திருக்கவே மாட்டான்.

பிளாபர் - அழகின் பக்த சிரோமணி - பத்தொன் பதாம் நூற்ருண்டின் ஹெலீன்-பேணுவின் வலிமையைக் கெளரவிக்கவும், அதன் அழகை அறியவும் உலகின் சகல