பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மtக்ஸிம் கார்க்கி கட்டுரைகள்

வாழ்வு, பொருளாதார வாழ்வு ஆகியவற்றின் அஸ்தி

வாரங்களேயே மாற்றி அமைக்கும் உன்னதமான லட்சியத்

தை அது தனக்கெனத் தானே வகுத்துக் கொண்டுள்ளது.

அதிகாரத்தை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றியுள்ள நாட்டிலே, அதன் மக்கள் தொகுதியில் மறைந்துள்ள

ஆற்றல் எவ்வளவு அபரிமிதமானது; எத்தகைய பெரும்

திறமைகள் அதனிடம் பிறக்கின்றன; புதிய உள்ளடக் கத்தை அளிப்பதன் மூலம் வாழ்வின் அமைப்புகளேயே

அது எவ்வளவு வேகமாக மாற்றிக் கொண்டிருக்கிறது

என்பதை எல்லாம் நாம் காண முடிகிறது.

அருமைத் தோழர்களே, நேர்மையான மக்களின் உண்மை பொதிந்த சொற்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் உடையோர், பாட்டாளிகள்,கலேத்தொண்டர்கள். பணி புரியும் அறிவாளிகள், உழைக்கும் விவசாயிகள் ஆகியோரே. அவர்கள் கலாசாரத் தலைவர்களாக விரும்பு

க்கள். அத்தகைய தகுதி அவர்களுக்கே உண்டு.

மாக்ஸிம் கார்க்கி