பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய மனிதனும் புதிய மனிதனும் 63

'மனித சிந்தனையின் பருந்துப் பாய்ச்சல் அவனுடைய ஆற்றலே, கம்பீரமாகவும் பெருமிதத்தோடும் அவனுக்குப் புலப்படுத்தியது இந்த நூற்ருண்டிலே தான். வாலஸ் என்பார் எழுதிய இருபதாம் நூற்ருண்டு என்ற புத்தகத் தின் ரஷ்ய மொழி பெயர்ப்பில் இவ்வாறு குறிப்பிடப்

பட்டிருக்கிறது. - -

ஆனல் விஞ்ஞான பூர்வமான சிந்தனையோடு, மற்ருெரு விதமான எண்ணப் போக்கும் வேகமாக வேலை செய்து வந்திருக்கிறது. அது முதலாளிகளிடையே, “வெல்ட்ஷ்மெர்ட்ஸ் என்று பெயர் பெற்ற மனப்பண்பை -கம்பிக்கை வறட்சியையும் இருண்ட கோக்கையுமே போதிக்கிற கவித்துவமும் தத்துவமும் கொண்ட மனே பாவத்தை - விளைவித்தது. 1813-ம் ஆண்டில் லார்டு பைரன் தமது 'சைல்ட் ஹெரால்ட்' எனும் காவியத்தின் முதல் காண்டத்தை வெளியிட்டார். அதற்குச் சிறிது காலத்துக்குப் பின்னர் தத்துவ ஞானியும் கவிஞரு மான ஜியாகொமோ லியோபார்டி (மொனல்டா பிரபு) தமது தத்துவத்தை உபதேசிக்கலானர். அறிவின் ஆற்றல் இன்மையை அம்பலப்படுத்துவதுதான் ஞானம் ஆகும். எல்லாம் மாயையே துயரமும் மரணமும்தான் தனிப் பெரும் உண்மைகளாகும்’ என்று அவர் போதித்தார்,

பார்க்கப்போனல், இது புதிய கருத்து அல்ல; மத வாதிகள் அதை வெகு அழகான சூத்திரங்களில் அமைத் திருக்கிரு.ர்கள். புத்தர் அதையே தான் போதித்தார். தாமஸ் மூர், ஜீன் ஜாக்ஸ் ரூஸோ முதல், பேரறிவும் ஆற்றலும் வாய்ந்த மற்றும் பலர் வரை, எவ்வளவோ மனிதர்களது உள்ளச் சுமையாக அது கிலேத்து கின்றிருக் கிறது. முதலாளித்துவத்தினால் அடக்கப் பெற்று விட்தல்ை, கிலப்பிரபுக்கள் கொண்டிருந்த துக்கம் தான்