பக்கம்:கார்க்கி கட்டுரைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழைய மனிதனும் புதிய மனிதனும் 71

திலும் ஆற்றல் நிறைந்த அறிவாளிகள் இவ்வளவு அதிக மாகச் சீரழிந்து மரணத்தை எய்தியதில்லே. கான் என் காட்டின் கண்மூடித்தனமான தேச பக்தன்' அல்லன். மக்களின் ஆத்மாவோடு எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு என்ற உறுதி எனக்கு உண்டு. இந்த விசாலமான பெரிய ஆத்மா, வாழ்வின் ஆதி கிலேயில் பிறந்த இருண்ட அவலட்சணமான மூட நம்பிக்கைகளினலும், அநாகரிக மான தப்பெண்ணங்களாலும் நிறைந்து விஷமேறிப் போயிருந்தது. அதை துர்கனேவ், டால்ஸ்டாய், டாஸ்டாவ்ஸ்கியின் நூல்களின் மூலம் எவரும் கற்றறிய முடியாது. ஆனால் அதனுடைய மக்கள் இல்க்கியத் திலிருந்து - காட்டுப் பாடல்கள், நாடோடிக் கதைகள், பழமொழிகள், பழங்கதைகளிலிருந்தும் அக் காட்டுக்கு உரிய சடங்குகள், மத ஆசாரங்களிலிருந்தும், அதன் சம்பிரதாயங்கள், கைத் தொழில்கள், தொழிற் கலைகள் ஆகியவற்றிலிருந்தும்தான் தெரிந்து கொள்ள வேண்டும். மக்களின் பயங்கரமான அறியாமை பற்றியும், மக்களின் சோகத்தைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்ள இவைதான் பயன்படக் கூடியவை. அதே சமயத்தில் அக் காட்டின் ஆச்சரியகரமான, பல்வேறு பண்புகளும் ஆழ்ந்த தன்மையும் கொண்ட ஆற்றல் பற்றியும் எடுத் துச் சொல்லக் கூடியவை இவையே. - - - -

பத்தொன்பதாம் நூற்ருண்டின் முற்பாதியில் வாழ்ந்த பணக்கார எழுத்தாளர்கள் விவசாயிகளைப் பற்றிக் கருணையோடு எழுதினர்கள், இளகிய உள்ளம் பெற்றவர்கள், இசைப்பியர்கள், கனவு காணும் சுபாவத் தினர், விதிக்குக் கட்டுப்பட்டவர்கள்- தெய்வப் பிறவிகள். -என்றெல்லாம் அவர்களைச் சித்திரித்தார்கள். ஆனல் உண்மையில் ரஷ்ய விவசாயியும் மனிதப் பிறவிதான், அவன் மீது சுமத்துப்பட்டுள்ள அடிமைத்தனத்தை