உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

காற்றில் வந்த கவிதை


இப்படிப் பிள்ளையார் வணக்கம் கூறிவிட்டுக் கதை தொடங்கும். வள்ளியம்மை ஒயில் கும்மி ஒரு நீளமான நாடோடிப் பாடல். முழுவதையும் இங்கே தர முடியாது. ஒன்றிரண்டு பகுதிகளை மட்டும் இங்கு மாதிரிக்குக் கொடுக்கிறேன்.

ஒரு பகுதியிலே ஒரு சோலையின் வருணனே வருகின்றது. அந்தப் பாடலைப் பாடியாடும்போது அந்தச் சோலேயே பூத்துக் குலுங்குவது போலத் தோன்றும். இதோ அந்தப் பாட்டைப் பாருங்கள்:

சோலை சிங்காரம் சொல்ல வெகு கெம்பீரம்
சீருலாவும் பொய்கை ஒரம் சேருமானநேகம்

(சோ)

நல்லரளி மல்லிகைப்பூ முல்லையுடன் சாதியே
செல்வமரிக் கொளுந்து செவந்திப்பூவும் சேருமே

(சோ)

பச்சைசா மந்தியும் பணிக்கு வெட்டி வேருமே
செச்சை நந்தியாவட்டைசெண்பகப்பூச்சேருமே

(சோ)

வண்டினம் புரண்டு மதுவுண்டு பாடும் காந்தாரம்
கொண்ட செவிக்கானந்தம் குயில் குருவி
சஞ்சாரம்

(சோ)

"சோலை சிங்காரம் சொல்ல வெகு கெம்பீரம்' என்ற அடியை மட்டும் ஆடுபவர்கள் பாடிக்கொண்டே ஆடுவார்கள்,