14
காற்றில் வந்த கவிதை
ரெயில் வண்டி வேகமாகப் போகிறதைப் பார்த்திருக் கிறீர்களா? பக்கத்திலிருந்து கவனித்தால் பூமியே நடுங்கு கிறதைப் போலிருக்கும். குப் குப் என்று ரெயில் செய்கின்ற சத்தமும் பயங்கரமாக இருக்கும்.
இந்த ரெயில் வேகத்தையும் சத்தத்தையும் ஒடக்காரன் பாட்டு ஒன்று அழகாகக் கூறுகிறது. வானம் நடுங்குகிறது. மத்தள ஓசை பொங்குகிறது. பூமி நடுங்குகிறது. இப்படி ரெயில் போகிறதாம்.
மானம் நல்ல ஏலேலோ கிடுகிடுங்க-ஐலலோ
கிடுகிடுங்க-ஐலலோ
மத்தளமே ஏலேலோ ஒசையிட-ஐலலோ
ஒசையிட-ஐலலோ
பூமிநல்ல ஏலேலோ கிடுகிடுங்க-ஐலலோ
கிடுகிடுங்க-ஐலலோ
போகுதடா ஏலேலோ ரயிலு வண்டி-ஐலலோ
ரயிலு வண்டி ஐலலோ
[குறிப்பு: இப்பாடலிலே ஐலலோ என்ற பகுதியை மட்டும் ஒடக்காரனேடு சேர்ந்து வேருெருவன் பாடுவான்.]
பாட்டு இத்துடன் முடிந்து விடவில்லை. ஒடக்காரன் மேலும் பாடுகிருன். ஆனால் இப்பொழுது பாட்டின் விஷயம் மாறுகிறது. ஒடக்காரன் கிளியைப் பற்றிப் பாடத் தொடங்குகிருன்.
அன்போடு வளர்த்தால் பிள்ளையைப்போலக் கிளி பழகும். வளர்ப்பவரிடத்திலே தாராளமாக வரும். அவர் தோளின்மீது உட்காரும். அவரோடு அன்போடு பேசவும் செய்யும். ஆனால், அன்பில்லாதவிடத்திலே அது பழகாது. அன்பில்லாமற் கூறும் சொல்லேக்கூட அது புரிந்து