பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

காற்றில் வந்த கவிதை


மேழி பிடிக்குங் கை முகஞ் சோர்ந்து நிற்கிறதே
கலப்பை பிடிக்குங் கை கை சோர்ந்து நிற்கிறதே
வேலித் தழைபறித்து விரலெல்லாம் கொப்புளமே
காட்டுத் தழைபறித்துக் கையெல்லாம் கொப்புளமே

என்று அங்கலாய்க்கிறார்கள்.

"கையலம்பத் தண்ணீர் இல்லையே, குழந்தை குளிப் பதற்குத் தண்ணிர் இல்லையே. இப்படி எத்தனை நாட்களுக்கு நாங்கள் இங்கு இருந்துகொண்டு பரிதவிப்பது?" என்று மேலும் அவர்கள் கூவுகின்ருர்கள்.

கலியான வாசலிலே கையலம்பத் தண்ணியில்லை பிள்ளை பெத்த வாசலிலே பிள்ளையலம்பத் தண்ணியில்லை

இதைவிடக் கஷ்டம் வேறு என்ன வேண்டும்? ஆதலினாலே, இவற்றை எல்லாம் தாங்க முடியாமல் நாங்கள் ஊரைவிட்டுப் போகிருேம் என்று சொல்லி அழுதுகொண்டு பெண்கள் புறப்படுவார்கள்.

அவர்களுடைய பாட்டிலே உண்மையான சோகம் தொனிக்கிறது. அந்தப் பாட்டை முழுதும் கேளுங்கள்.

பூமியை நம்பியல்லோ
      ஐயோ வருண தேவா
பிள்ளைகளைப் பெத்துவிட்டோம்
      ஐயோ வருண தேவா
பூமி செழிக்கவில்லை
      ஐயோ வருண தேவா
புள்ளே வயிறு வாடறதே
      ஐயோ வருண தேவா