உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

என்று தொடங்கும் சித்தர் பாடல் நாடோடி இனத்தைச் சேர்ந்ததாகவே தோன்றும். ஆனால், அதில் பொதிந்திருக்கும் கருத்துக்கள் பலவிடங்களில் நமது அறிவுக்கும் எட்டாத உயர்ந்த தத்துவ உண்மையாக இருக்கும்.

இராமலிங்க சுவாமிகளின் பாடலிலே நாடோடி இசையிலமைந்தவைகளும் உண்டு.

வானத்தின்மீது மயிலாடக் கண்டேன் மயில் குயிலாச்சுதடி-அக்கச்சி மயில் குயிலாச்சுதடி

என்ற அவருடைய பாடல் நமக்கெல்லாம் தெரியும். நமது தேசியக் கவி பாரதியார் நாடோடிப் பாடல்களின் இசையமைப்பிலே பல பாடல்கள் பாடியுள்ளார். 'கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம்' என்று வரும் தங்கப் பாட்டு ஒரு நல்ல உதாரணம். நொண்டிச் சிந்து பாரதியாருடைய கையில் புதிய ஜீவன் பெறுகிறது.

"உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரியம்மா" என்ற பாரதியாரின் முத்துமாரி பாட்டு பலருக்கும் தெரிந்திருக்கும். அந்தப் பாட்டுக்கு இசையமைப்பைப் பாரதியார் ஒரு நாடோடிப் பாடலிலிருந்து எடுத்திருக்கிருர், அந்தப் பாடலும் முத்துமாரியின் மேல் எழுந்ததுதான்.

ஆதியிலே அமைந்தசக்தி-எங்கள் முத்து
      மாரியம்மா, எங்கள் முத்து மாரி
ஆளுருளாம் பூமி யெல்லாம்-சிங்கத்து
      மேலேறி யவள், சிங்கத்து மேலேறி
கன்னபுரம் வந்திருப்பாள்-எங்கள் முத்து
      மாரியம்மா, எங்கள் முத்து மாரி