பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48 காற்றில் வந்த கவிதை பள்ளி விரலைக் காட்டினல் நிற்குமாம் அந்தயானை -என்தோழி பெண்டுகளே எடுங்கடி குலவைகளே திருமண வைபவத்திலே மற்றும் ஒர் காட்சி. பல்லக்கு கள் வருகின்றன. மேலே சிவிகைகள் நிழல் செய்கின்றன. நாட்டிய மாடுகிருர்கள். நாகசுர ஒலி இன்பமாக எழு கின்றது. கோலாகலத்தோடு சிரித்த மு க ங் கா ட் டி மாப்பிள்ளை தம் அத்தை மகளான புது மணப் பெண் ணுடனே வருகிருர். இந்தக் காட்சியைப் பள்ளிகள் மற்ருெரு பாட்டிலே வருணித்துக் குலவை பாடுகிரு.ர்கள்: பல்லக்காம் பல்லக்காம் பொன்பதைத்த பல்லக்காம் ஆலத்தி ஒருபுறமாம் அங்கே பல சிவிகைகளாம் நாட்டியங்கள் ஆடிவர நாகசுரம் ஊதிவர தேவேந்திரப் பள்ளிகளும் தேன்போலப் பாடிவர அத்தை மகளுடனே சிரித்து முகம் கொடுத்து நம்ம ஊர்ப் பண்ணையார் சீமையாள வாரார்கள் -என்தோழி பெண்டுகளே எடுங்கடி குலவைகளே இவ்வளவு சிறப்பெல்லாம் கூறிக் குலவை பாடுகின்ற பெண்களுக்கு நல்ல பரிசுகள் கிடைக்காமலா போகும்?