பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

முதல் பாட்டிலே பிள்ளையாரைக் குறித்துப் பாடவேண்டு மல்லவா? பிள்ளையார்தானே விக்கினங்களையெல்லாம் நீக்குபவர்? அவரைக் குறிப்பாக முன்னல் நிறுத்திப் பள்ளிகள் கலியாணப் பெண்ணுக்கு மாப்பிள்ளை கணையாழி கொண்டு வருவதைப் பற்றிப் பேசுகிருர்கள்.

குடுகுடு மாங்காயை மடியிலே கட்டிக்
குண்டுமணிப் பிள்ளையாரை முன்னல் நிறுத்தி
ஒடுகிற தண்ணிரில் நீந்தி வருவாரா?
உடம்பெல்லாம் சந்தனம் பூசி வருவாரா?
அங்கோர் ஊருக்குப் போயும் வருவாரா?
அடையாளக் கணையாழி வாங்கி வருவாரா?
-என்தோழி பெண்டுகளே எடுங்கடி குலவைகளே

பிறகு நகைச் சுவையோடு கூடிய ஒரு பாடல் வருகிறது. மாப்பிள்ளை ஒரு பெரிய யானையாம்; யாருடைய கட்டுக்கும் அவர் அடங்கமாட்டாராம். யானையை எவ்வளவு பெரிய மரத்தில் கட்டினலும் நிற்காமல் மரத்தைத் தள்ளிக் கொண்டுபோய் விடுமாம். அப்படிப்பட்ட யானையைப் போன்ற மாப்பிள்ளை அவருடைய பண்ணையிலே வேலை செய்யும் பள்ளிகள் ஏதாவது கூறினல் அதை மீறி நடக்க மாட்டாராம். பண்ணையில் வேலை செய்கிறவர்களிடத்தில் அவருக்கு அத்தனை மரியாதை இருக்கிறது என்று பள்ளிகள் தங்கள் குலவைப் பாட்டில் கூறுகிறார்கள்.

ஆனையென்ருல் ஆனை அறுபதடி ஆனே
ஆலமரத்தில் கட்டினல் நிற்காதாம் அந்த யானை
அரசமரத்தில் கட்டினல் நிற்காதாம் அந்த யானை
புங்கமரத்தில் கட்டினல் நிற்காதாம் அந்த யானை
புளிய மரத்தில் கட்டினல் நிற்காதாம் அந்த யானை