பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71



வேகாத வெய்யில்

வயிறு வளர்ப்பதற்கு எத்தனையோ வகையான தொழில்களைச் செய்யவேண்டி இருக்கிறது. கூலிவேலை செய்பவர்கள் பல பேர். வேறொருவரிடத்திலே வேலை செய்வதென்றால் அவருடைய விருப்பத்திற்கேற்றவாறு நடக்க வேண்டும். எல்லோராலும் அப்படி நடக்க முடிகிறதா?

அப்படிப்பட்ட வேலையை வெறுப்பவர்கள் உண்டு. பிறருக்கு அடங்கி வேலை செய்வதில் சிரமங்கள் பல இருக்கின்றன. இளகிய உள்ளம் படைத்தவர்கள் அவ்வளவு கண்டிப்பாக வேலை வாங்கமாட்டார்கள். கூலிக்காரர்களை மனிதரென்றே நினைக்காதவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பயந்து கூலி வேலையை விட்டொழித்தவர்களும் உண்டு.

கூடை முறம் கட்டுகிறவர்கள் பிறருக்குப் பணிந்து வேலை செய்ய வேண்டியதில்லை. சிரமப்பட்டுப் பல கூடைகள் முடைந்தால் ஊதியம் அதிகமாகக் கிடைக்கும். இல்லா விட்டால் ஊதியம் குறையும். பிறருடைய கண்டனம்