பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

19 டோக்ளாக் வம்சம்-டில்லியில்ஆண்ட மகம்மதிய வம்சம் கி.பி. 1826-1525 தக்கோல யுத்தம்-ராஷ்டிரகூட அரசனை மூன்ருவது கிருஷ்ணன், சோழர்களே முறியடித்தது, கி.பி. 940. தசருபகம்-ஒர் சமஸ்கிருத நூல் கி.பி. 10-ம் நூற்ருரண் டின் பின்பாகம். தண்டின்-ஒர் சமஸ்கிருத ஆசிரியர், கி பி. 6-ம் நூற்ரு ண்டு. தணிகைப் புராணம்-கச்சியப்ப முனிவர் இயற்றியது, கி.பி. 19-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) தத்தகாமினி-(தாதுகாமினி ?) விஜயவம்சத்து இலங்கை மன்னன், அது ராஜபுரத்தில் ஆண்ட காலம் சுமார் கி.மு. 200. தத்துவப்பிரகாசர்-தத்துவப் பிரகாச ஆசிரியர் 16-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) தத்துவராயர்-பாடுதுறை ஆசிரியர்-கி.பி. 16-ம் நூற்ரு ண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) தத்துவராயர்-நெஞ்சுவிடுதூது ஆசிரியர், கி.பி. 11-ம் நூற்ருண்டு. தந்திதுர்க்கன்-ராஷ்டிரகூட அாசன் ஆண்டது, கி.பி. 753—775, தந்திவர்மன்-பல்லவ அரசன்- காலம் கி.பி. 9-ம் நூற்ரு ண்டின் தொடக்கம். (திரு சேது பிள்ளை அவர்கள்) தமிழ் கல்வெட்டுகள்-ஆரம்பம் சுமார் கி.பி. 6-ம் நூற் ருண்டு (பூ பி. டி. பூரீனிவாச ஐயங்கார்) தலக்காடு-மைசூர் ராஜ்யத்திலுள்ளது, கி.பி. 1117-ஆம் ஆண்டில் விஷ்ணுவர்த்தன.அடைய ராணுவத் தலைவ னை கங்கராஜா என்பவனுல் பிடிக்கப்பட்டது. தலையாலங்காடு யுத்தம்-சுமார் 400-500 கி.பி-க்குள் ளாக-பாண்டியன் நெடுஞ்செழியன் சேரர்களே முறி யடித்தது.