பக்கம்:காலத்தின் குரல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12


ஊழியன் மாதம் இருமுறையில் சேர்ந்தேன். 1944 பிப்ரவரி கடைசியில், கு.ப. ராஜகோபாலன் அதன் ஆசிரியராக இருந்தார். கும்பகோணத்தில் இருந்து கொண்டே விஷயங்கள் அனுப்பி வந்தார்.

நான் சேர்ந்து ஒரு மாதம் ஆனதும், கு. ப. ரா. இறந்து போஞர். பத்திரிகையின் வளர்ச்சிக்கு நான் தீவிரமாக உழைத்தேன், துணை ஆசிரியராக, ஒரு வருஷத்தில் திருலோக சீதாராம் விலகிக்கொண்டு, திருச்சி போய் சிவாஜி ஆசிரியர் ஆளுர், நான் கிராம ஊழியன் ஆசிரியராக உழைத்தேன். கி. ஊ.” என் வளர்ச்சிக்குத் துணை புரிந்தது.

நான்கு வருடங்கள் அங்கு பணியாற்றினேன்.

பத்திரிகை நடத்தி ஆயுசு முழுவதும் பெற இயலாத பெரும் லாபத்தை அச்சு இயந்திரங்களை விற்பதன் மூலம் சுலபமாகப் பெற்று விட முடியும் என்று உணர்ந்த நிர்வாகி ரெட்டியார் அப்படியே செய்தார். பனம் சம்பாதித்தார் பத்திரிகையை நிறுத்தி விட்டார் 1947 மே மாதத்தில்.

நான் அந்நாட்களில் விறு விறுப்பான சிறு புத்தகங்கள் எழுதி, நானே பிரசுரித்து வந்தேன். “கோயில்களை மூடுங்கள் -கோரநாதன். சினிமாவில் கடவுள்கள்' --கோரநாதன். அடியுங்கள் சாவுமணி!-மிவாஸ்கி. ‘குஞ்சாலாடு'-நையாண்டி பாரதி. இவை சில சுடச் சுட விற்பனை ஆயின. ஆயிரம் ரூபாய் முதல் இருந் திருந்தால், பதிப்பகத்தை நிலைநிறுத்தி நல்ல வெளியீடு களை கொண்டுவந்திருக்க முடியும். கையில் காசும் இல்லை; கடன் கொடுப்பார் யாரும் இல்லை. 1947 ஆகஸ்டில் சுதந்திரம் கிடைத்த சமயம், நான் துறை யூரில்தான் இருந்தேன். 1947 செப்டம்பர் கடைசியில் சென்னை சேர்ந்தேன். சினிமா உலகம்’ பத்திரிகை