பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 காலந்தோறும் பெண் அசாதாரணப்பட்டில் மூடிப் புதைக்கப்பட்டது! பெண்ணின் அறியாமை எவ்வளவு பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கிறது! சங்கரரின் வாழ்க்கை வரலாற்றில், அவர் இறதியில் அன்னைக்கு அந்திமக்கிரியைகள் செய்ய வந்த விவரங்கள் இன்றும் சில ஐயங்களைக் கிளப்புகின்றன. அவர் அன்னைக்கு அந்திமக்கிரியைகள் செய்ய வந்தபோது, நம்பூதிரி சமுதாயம் அதை ஏற்கவில்லை. “பற்றற்று துறவு பூண்டவன், தாய்க்குக் கிரியை செய்வதா? தகாது!’ என்று அந்தப் பிராமணர்கள் எதிர்த்தனர்-அதாவது, ஆரியாம்பாளுக்கு. இறுதியிலும் நிறைவான அமைதி கிடைக்கக்கூடாது என்று வம்பு செய்தார்கள். ஆனால் சங்கரர், தாயே தம் முதல்வி என்று தீர்மானமாக அதே இடத்தில் அவளுக்கு எரியூட்டிக் கிரியைகளைச் செய்தார். அந்தப் பிராம்மண சாத்திரங்களைத் தகர்த்தெறிந்தார். சங்கரரின் சித்தாந்தம் உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அவர் பிறந்த இடத்தில், அவர் பெரும்புகழ் அடையவில்லை. எனவே ஆதிசங்கரா சாரியருக்கும், கைம்பெண்களின், அலங்கோல அவமதிப்புக் கொடுமைகளுக்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை என்பதே ԶԵ ՅԾծTՅՆՈԼ[). சமணம், தன் நெறிக்குள் பெண்களுக்குத் தாராளமாக இடம் அளித்த சமயம். பெண்களுக்கும் துறவு உரியது: இல்லமே குறிக்கோள் இல்லை என்று உரிமை வழங்கியது. அவர்கள் தம் முடியை (தாமாகவே பிடுங்கிக் கொள்ளும் கொடுமையில்) இழந்து, கடுமையான வாதங்களுக்கும், சோதனைகளுக்கும் தம்மை உட்படுத்திக் கொண்டு துறவு பூண இடமளித்து, அந்நாளைய இந்து சமய சாத்திர நெறியாளரின் சிந்தையை ஊக்கிவிட்டது. கணவனை இழந்த பெண்கள் எல்லா நலன்களையும் துறந்துவிட வேண்டியவர் தாமே?...அவர்கள் முடியைப் பிடித்து இழுத்து முண்டனம் செய்து வெள்ளை போர்த்தினார்...? குரூரமான இந்த வெறி,