பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கீதை ஒளியில். பெண் (சு) தருமம் “பாத்திரக் கடையில் மாசம் இருநூறு ரூபாய் கொடுக்கிறார்கள் என்று வேலைக்குப் போகச் சொன்னேன் மாமி! பழிகாரி, பிராமண சாதியில் பிறந்துவிட்டு, சாதி கெட்டு எவங்கூடவோ ஒடிப்போயிட்டா. என்ன செய்வேன். அன்னிக்கே காலை ஒடிச்சி உள்ள போட்டிருக்கணும். வயத்துக் கொடுமை மாசம் இருநூறானால், ஏதோ ஆயிரம் ரெண்டாயிரம் சேர்த்து, கையில் ஒரு வளைன்னாலும் அடிச்சுப் போடலாமே, நாம்தான் சமையல்காரனைக் கட்டிண்டு ஆயுசுபூரா அவஸ்தைப்பட்டாச்சு. ஏதோ இதை பத்தாவது படிக்க வைச்சிருக்கோம்; ஒரு கிளார்க் உத்தியோகம் பண்றவனையேனும் பார்த்துக் குடுக்கணும்னு நாயா, பேயா அலைஞ்சு நாலு காசு சேக்கறேன். இப்படிப் பண்ணிட்டாளே. வெக்கம், மானம், சூடு, சொரணை, ரோசம் ஒண்ணில்லாம இப்படி ஒடுமா 2” இப்படிப் பிரலாபிக்கும் ஏழைத்தாய், புருஷன் இறந்தபின் அடுப்பறையில் வெந்து பட்சணம் போட்டும், சின்ன சமையல் ஏற்றும், (பெரிய சமையலுக்கு ஆண்கள் இருக்கிறார்களே) ஐந்து மக்களைக் காப்பாற்றுபவள். ஒடிப்போன பெண் மூத்தவள். இவள் சாதி கெட்டு பொருளாதார ரீதியாக உயர்நிலைக்குத் தாவினாலும் இந்தத் தாய் மன்னித்து ஏற்கமாட்டாள். ஏனெனில் குல நெறிகளை முழுவதுமாகக் கட்டிக் காப்பவர்கள் இத்தகைய பஞ்சைகளே. சமய சமுதாய ஆதிக்கம் இந்த அபலைப் பெண்களையே பலமாகக் கவ்விக்கொண் டிருக்கிறதென்றால் மிகையில்லை. எனவே அந்தப் பெண் வீடு தேடி மருமகனுடன் வந்தால் முரட்டுக்காள்ையாகச் சீறுவாள். பிரசவம்...? ம்ஹாம். மூச்சு விடக்கூடாது. தலை முழுகிவிட்டேன் சாகட்டும் என்பாள்.