பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 காலந்தோறும் பெண் அடியை உவந்து ஏற்றுக்கொள்வது போல் தலை வணங்குவதுடன், குப்பையிலும் தானே வீழ்ந்ததாக அந்தப் பழியையும் குற்ற உணர்வையும் தானே சுமக்கிறாள். இவளுக்கு அறிவு இருக்கிறது. ஆனால் அது இயங்குவது நின்று எத்தனையோ காலமாகிவிட்டது. அதில் இயற்கையான உயிரோட்டம் கிடையாது. குதிரைச் சேணம் போல் அவளுடைய அறிவுக் கண்களும் சேணம் சுமக்கின்றன. அந்தச் சேனங்களின் பார்வைக்கு உட்பட்டு, அவளது இயற்கையான ஆளுமை மலர்ச்சி குறுக்கப்பட்டு ஏன் இந்த நிலை? இந்த முடக்கம் எப்படி நேர்ந்தது? ஒவ்வொரு படிக்கட்டிலும் இவளது அறிவியக்க மலர்ச்சி கட்டுப்படுத்தப்படுவது எதற்காக? இவள் தன்னைத்தானே உணர இயலாதபடி, பிறவி எடுத்த நாளிலிருந்து ஒருவனுக்காக என்ற கருத்தைச் சுமக்க வைப்பதன் காரணம் என்ன? பண்பாடு, கலாச்சாரம், சமய மரபுகள் என்றெல்லாம் இனம் புரியாத தெளிவில்லாத பாசிக் கட்டையை இவளுக்கு உரித்தாக்கி, உயர் கல்வி, அறிவாற்றல், பல துறை ஆய்வுப் பயிற்சிகள், ஆன்மீக நெறியின் சாதனைகள் என்று விரிந்த எல்லைகளில் ஆணுக்குச் சாசனம் பண்ணிக் கொடுத்திருக்கும் முறையும் நெறிகளும் எப்போது, எப்படி யாரால் ஏற்படுத்தப்பட்டன? - இவளுக்குக் கல்வியும் ஏனைய பிற சலுகைகளும் அளித்திருப்பதாக ஆண் சமுதாய அரசியலமைப்பு, தன் பெருந்தன்மையையும் கருணையையும் பறையடித்துக் கொண்டிருந்தும் பாசிக் குட்டையின் சேற்றிலிருந்து விடுபடாத நிலையிலேயே இருப்பது ஏன்? பாசிக்குட்டை, தன்னை எப்படிப் பிணிக்கிறது? சேற்று மொத்தையா, பளிங்கில் மூடிய குப்பைக் கசடுகளா