பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 காலந்தோறும் பெண் அவளை வெறும் கூடாக்கி, அழிப்பதற்கும் தரும நியாயம் சொல்லும் அளவுக்கு வரதட்சணையை ஆணாதிக்கச் சமுதாயம் வளர்த்திருக்கிறது. இந்நாள் மக்கள் பெருக் கத்தினால் கூடிவரும் பிரச்சனைகளைத் தவிர்த்து மக்கள் சமுதாயத்தை வாழ வைக்க, தெருவுக்குத் தெரு கருச் சிசு, ஆணா, பெண்ணா என்றறிய சோதனை நிலையங்களை ஏற்படுத்திப் பெண் சிசுக்களை அழித்தாலே மக்கள் பெருக்கம் தடுக்கப்படலாம் என்ற மிக அருமையான கருத்துக்கள் நம் பெண்களிடையே கூட நிலவி வருகிறது! இந்த நிலையில் வரதட்சணை ஒழிப்புக் கருத்தரங்குகள், பட்டி மன்றங்கள் வெறும் பொழுதுபோக்கு கலா நிகழ்ச்சிகளுக்கு மேல் எந்தச் சாதனையைச் செய்துவிடும்? காசி யாத்திரைக்குக் கைத்தடி, குடை, செருப்பு, விரதத் துக்கு நூற்றெட்டு நெய் அதிரசம், அது வைக்க வெள்ளிக் கூடை (தங்க முலாம் பூசினால் உத்தமம்), கண்ணாடி, பட்டு, கன்னிகையைத் தானம் கொடுக்கும்போது, அந்த மாப்பிள் ளையை சாட்சாத் மகாவிஷ்ணுவாகப் (அல்லது பரமேசுவர னாக!) பாவித்து, தாய் நீர் வார்க்க தந்தையானவர் காலைக் கழுவ, வெள்ளித்தட்டு என்று திருமண சடங்குகள் ஒவ்வொன்றும் பெண்ணைப் பெற்றவரிடம் இருந்து பொருள் கறக்க இடம் தருவதில் என்ன விந்தை இருக்கிறது? திருமணச் சடங்குகள். அவை என்ன சொல்கின்றன? பார்ப்போம். 21. காதல் - துதாட்டத் துருப்புச் சீட்டா ? நமது புனைகதைகள், நாடகம், சினிமா, தொலைக்காட்சி வழிவரும் சமூக நாடகங்கள் எல்லாவற்றிலும், அடிக்கடி தவறாமல் வரும் காட்சியானாலும், அலுப்பூட்டும்படி புளித்துப்