பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 145 உள்ள நிலையில், இருவரும் ஒடிப் போய்த் திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதானே? அதுதான் நிகழாது. ஆண் தீவிரம் காட்டுவதெல்லாம், அவளை அநுபவிக்கும் ஒரே த்ரில்"லுக்குத்தான். பெண் கட்டுப்பட்டுக் குட்டுப்பட்டே முதிர்ந்திருப்பவள் அல்லவா? சட்டென்று வேலியைத் தகர்த்துவிட மாட்டாள். எனவே, திருமணம் என்று நிர்ப்பந்தம் செய்வாள். வேலி தகர்ந்தாலும், இந்த வகையில் அவள்தான் பதை பதைத்துப் போவாள். தன் பெற்றோரை அவர்கள் வீட்டுக்கு அனுப்புவாள். இந்த வகையில் சங்க இலக்கியத்துத் தலைவன் தலைவி நிலையையும் கூடச் சொல்லலாம், தோழி வந்து, வரைவு கடாதலை வலியுறுத்துவது ஏன்.. இப்போதுதான் உண்மையான சோதனைகள், இடுக்கிப் பிடிகள் எல்லாம் பெண்ணைத் தாக்குகின்றன. அவர்கள் கோரிய வரதட்சணை, சீர்வரிசை எல்லாவற்றுக்கும் பெண் வீட்டார் தலையசைத்து ஒப்ப வேண்டும். ஏனெனில் ‘காதல்’ என்ற ஒன்று குறுக்கிட்டுப் பெண்ணுக்குக் கரும்புள்ளி குத்திவிட்டதே? இந்தக் கட்டத்தில் அந்தப் பிள்ளையாண்டான், கயவன் என்று வெளிப்பட்டாலும்கூட, பெண்ணைப் பின்னுக்கு இழுத்துக்கொள்ளும் பெற்றோர் அபூர்வம்அதுமட்டுமல்ல, பெண்ணே, தன் கற்பு உணர்வால் பின் நகர இடம் கொடுக்கமாட்டாள் - இத்தனையும் வந்தபின், அந்தப் பிள்ளையாண்டான், தன் உறவினர் குழாத்துடன் பெண் பார்க்க வரும் நாடகத்தையும் அரங்கேற்றுகிறான்; பெண் வீட்டாரும் - ஏன் பெண்ணும் உடன்படுகிறாள். அவளைக் காட்சிப் பொருளாக்கிப் பேரம் நடக்கிறது. இங்கு ‘காதல்’ பிள்ளை வீட்டாருக்குத் துருப்புச் சீட்டாகப் பயன்படுகிறது. “பெண் பார்ப்பதெல்லாம் எதற்கு?’ என்று, இந்த நிலைக்கு வந்த பெண், கதைகளில், சினிமாக்களில்கூடக் கேட்கமாட்டாள்! இந்தப் பெண்பார்க்கும் படலம், இவ்வாறு எல்லாப் பொழுது போக்கு அம்சங்களிலும் திருப்பித் திருப்பி, கா.பெ. - 10