பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 காலந்தோறும் பெண் சாதி-மதப் பாகுபாடு இல்லாமல் சித்திரிக்கப் படுகிறது. ஒட்டலில், பார்ட்டியில், சினிமாவில் நாகரிக அறிமுகமாகப் பார்ப்பதும்கூட, அதிமாக வலியுறுத்தப் படுவதில்லை. எந்தப் புடவை உடுத்திக்கொள்வது? அலுவலகத்தில் என்ன காரணம் சொல்லி அநுமதி கேட்பது? என்ன டிபன் செய்வது? எந்தப் பாட்டைப் பாடுவது? என்று ஒராயிரம் பிரச்னைகளில் பெண் நிம்மதி இழக்கும் நிலையும், இறுதியில், “ஊருக்குப் போய்க் கடிதம் எழுதித் தெரிவிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு மறக்காமல் வழிச் செலவுத் தொகையைப் பெற்றுக்கொண்டு செல்வதும், நாகரீகப் பரிமாணங்களாக மேவிவிட்டன. இதற்கு உடன்படமாட்டேன் என்று சொல்லக்கூடிய பெண், தன் வாழ்நாளில் திருமணம் என்ற நிகழ்ச்சியையே காணாதவளாகி விடுவோமோ என்று அஞ்சுகிறாள். இவ்வாறு பெண்ணைப் பொறுக்க, தேர்ந்தெடுக்க மணமகனுக்கு உரிமை இருப்பதுபோல் அவளுக்கு ஏன் தன் துணைவனைத் தேர்ந்துகொள்ளும் உரிமை இல்லாமல் போகிறது? பெண் எப்போது இவ்வகையில் ஒரு காட்சிப் பொருள் நிலைக்கு இழிந்தாள்? பின்னோக்கிப் பார்த்தால், வேத முறைகளைப் பின் பற்றித் தோன்றிய, தரும சூத்திரங்கள் நெறிப்படுத்தப்பட்ட பின்னரே, பெண்ணின் சார்பு நிலை கட்டாயமாக வலி யுறுத்தப்பட்டதென்று காண்கிறோம். பெற்றோர் மகளுக்கு மணமகனைத் தேர்ந்தெடுக்கையில், அறிந்த குடும்பத்தினராக, குலம், கோத்திரம் உகந்ததாக இருக்கவேண்டும் என்ற கருத்து மட்டும் குறிப்பாகிறது. ஏன்? அரசகுடும்பச் சுயம்வரங்களிலும் கூட, பெரும்பாலும், பெண் தனக்கு விருப்பமானவனைத் தேர்ந்தாள் என்பது, ‘நளதமயந்தி கதை தவிர வேறு வரலாறுகளில் காணப்பட