பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 காலந்தோறும் பெண் குக்கர், மிக்ஸி போன்ற நவீன சமையலறைச் சாதனம், அல்லது ரூபாய் நோட்டுக்கள் அடங்கிய உறையாகவும் இருக்கலாம்) "மொய் வைத்தல்’ என்று சாதாரணமாகக் குறிக்கப்படும் (முக்கியமான!) கல்யாணச் சடங்கை, பிரும்ம, அல்லது வேத விதிப்படி செய்வதான இந்து திருமணச் சடங்குகளில் "ஆசீர்வாதம்’ என்று கெளரவமாகக் குறிக்கிறார்கள். இந்த ஆசீர்வாதச் சடங்கில், புரோகிதர் மேற்கூறிய மந்திரங்களை ஒதி, மணமகளுக்கான பரிசுகளை வழங்குவது இன்றளவும் வழக்கில் உள்ளது. வேத விதிப்படி என்று ஒழுங்கு செய்யப் பட்ட பழைய நாளையத் திருமணங்களில் நான்கு நாட்கள், புதிய தம்பதி தொடர்ந்து தீ வளர்த்துப் பேணி இல்லறத்தான் என்று பழைய கால ஒழுக்கத்தில் புகுந்ததற்கு அடையாளமாகச் சடங்கு செய்வார்கள். ஐந்தாம் நாள் இறுதியாக ஒமம்’ செய்தபின், இந்த ஆசீர்வாதச் சடங்கு நிகழும். அப்போது வேத வாசகங்களால் மணமகளையும் மணமகனையும் அந்தணர் பலர் கூடி ஆசீர்வதிப்பது வழக்கம். ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, இந்நாட்களில் பழைய சடங்குகள் வெறும் சின்னங்களாப் போக, (அல்லது பொருளற்ற கேலிக் கூத்துகளாகிப் போக) புதிய சடங்குகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. நிழற் படங்களுக்காக வீடியோ காட்சிகள் எடுப்பதற்காக, தாலி கட்டும் சடங்கு முதல் மீட்டும் மீட்டும் ஒழுங்கு செய்யப்படுகிறது. ரிசப்ஷன், லைட் மியூஸிக் என்ற நிகழ்ச்சிகள் முக்கியத்துவம் பெற்று, தீ வளர்த்தல், ஆசீர்வாதம் என்ற அம்சங்களைச் சுருக்கச் சடங்குகளாக்கி, முகூர்த்தம் நிகழ்ந்த கையுடனே முன் தள்ளி, மணமகனையும், மணமகளையும் வைதீகக் காப்புத் தளையில் இருந்து விடுவித்துவிடுகின்றன. எனவே, இன்றைய பல இலட்சக்கணக்கான வேத விவாகங்கள் எனப்பெறும் சடங்குகள், முழுதுமே கேலிக்