பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் - 177 அற்புதமாயிருக்கும். கொட்டாம சிந்தாம, பாழ் பண்ணாம பண்ணுவோம். தயங்காதேங்கோ. நீங்க கெளசல்யாம்மாவைக் கேட்டுப் பாருங்கோ. இதோ தெருமூலைதான்.” 'ரேட்டுக்காகவேனும் அவர் இதை ஒப்புவார் என்று அந்த அம்மை நினைக்கிறார். ஆனால் வந்தவரோ “பெண்டுகள் இந்த மாதிரிச் சமையலுக்குச் சரியில்லை. ஏதோ, திவசம், சமாராதனை என்றால் போனால் போகிறதுன்னு வைக்கலாம்” என்று திரும்பிப் போகிறார். உயர்ந்த சாரத்தின் மேல்முண்டாசுத் தலையும் அடர் மீசையுமாக மேஸ்திரி வசதியாக அமர்ந்த கொத்துக் கரண்டியினால் அந்த உலகை ஆள்கிறார். கூனிக்குறுகி உலர்ந்து நைந்த உழைப்பின் உருவங்களாகப் பெண்கள் சும்மாட்டுக் கந்தையின்மீது, கல்லோ, மண்ணோ, கலவையோ சுமந்து சாரத்தில் ஏறி இவர்களுக்கு உதவுகின்றனர். மேஸ்திரி அங்கு உட்கார்ந்து காபி அருந்துவார், பீடி குடிப்பார், வெற்றிலை போடுவார்; ம் ஆகட்டும்! ஆகட்டும்! என்று 'சித்து’ப் பெண் பிள்ளைகளை அதிகாரத்துடன் முடுக்கிய வண்ணமிருப்பார். இவர்கள் கட்டுமானத்துக்கு வேண்டிய தண்ணிர் சுமக்க வேண்டும்; பெருக்க வேண்டும்; சலிக்க வேண்டும்; ஒராயிரம் பிற வேலைகளில் தங்கள் ஆற்றலைக் கரைத்து விளக்க வேண்டும். ஆனால் பெயருக்கு மெல்லியல்: ஊதியத்துக்கு வலிவில்லாதவள். குழுத்தலைமை, தாய்த்தலைமை, முதல்வி என்ற ஆதிமதிப்பில் இருந்து இழிந்து, வீடென்ற எல்லைகளுக்குள் பாதுகாக்கப்பட வேண்டியவள் என்ற அறியாமையில் பெண் ஊறிவிட்ட பிறகு, உடலுழைப்பு இவளுக்கே உரியதாக ஒட்டிவிட்டது. கல்வி இல்லை என்றே தீர்ந்துவிட்டது. ஆதிச் சமையற்காரி, ஆதிக் குடிசைக்காரி, ஆதிப் பயிர்த் தொழிலாளி, ஆதி நெசவாளி என்று தொழில்களை வீட்டு வளைவில் செய்ய முற்பட்டவள் பெண்தான். ஆனால் இந்நாளில், கா.பெ. - 12