பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் + 17 சுவிஸ் நாட்டு பச்சோஃபெண் (Bachofen) என்ற மானிட இயல் அறிஞர், ஆதியில் மனித இனம், எந்த நியதியும் இல்லாத பாலினக் கலப்பில் விலங்கு நிலையில்தான் பல்கிப் பெருகினர்; அந்த நிலையில் தாய் வழிதான் முதன்மை பெற்று. பின்னரே குடும்பத் தலைவர் தந்தை என்ற முக்கியத்துவம் பெற மாற்றம் கண்டனர் என்று தகுந்த காரணங்களுடன் விளக்கினார். ஆனால் பல நூற்றாண்டுக் காலமாக, ஆணே உயர்ந்தவனென்று வலியுறுத்தப்பட்டு, சகல கண்ணோட் டங்களிலும், ஆணாதிக்கம் முதன்மைப் படுத்தப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டில் மரபுவாதிகளும், சமய குரவர்களும் இந்தக் கருத்தைத் தம் கோட்டையைக் குறிபார்த்து ஊதப்பட்ட அபாயச் சங்கொலியாகவே கருதினர் எனலாம். இந்த நிலையில் வெஸ்டர் மார்க் என்ற அறிஞர் 'மனித இனம் ஒருவனுக்கு ஒருத்தியாகத்தான் ஆதியிலிருந்தே வளர்ச்சி பெற்றது; பின்னரே உயர்வு சிதைவாகப் பலதார மணமுறை வந்தது’ என ஒரு போடு போட்டார். இந்த ஒழுக்கப்படுத்தும் ஆராய்ச்சிக் கருத்து தீவிர சமயவாதிகளுக்கும் மரபு வெறியர்களுக்கும் மிகவும் உவப்பாக இருந்தது. இவர் தமது முடிவுக்கு இன்னும் சப்பைக்கட்டுகளும், குஞ்ச ஜோட னைகளும் அமைக்கும் பல பிரசுரங்களை வெளியிட்டார். இந்தச் சலசலப்புக்கள், ராபர்ட் ஸ்டீஃபன் ப்ரிஃபால்ட் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த அறிஞரின் சிந்தனைகளுக்குத் தூபம் போட நுண்ணிய ஆராய்ச்சியை மேற்கொண்டு, தாயர்' (mother) என்றொரு நூலைப் படைத்தார். பெண் தலைவியாக அரசோச்சினாள் என்று அந்த ஆதி இனக் குழுவினரைப் பற்றித் தீர்மானமாக வரையறுக்காமல், ஆனால், சமுதாயம் சார்ந்து பெண்களே முதன்மை பெற்றிருந்தனர் என்பது அவர் கருத்து. பொதுவாக, திருமணம் என்று வரும்போது, ஆண் பெண்ணின் வீட்டுக்கு வந்து தங்கிவிடுதல் ஒரு முறையாகவும், கா.பெ. - 2