பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 காலந்தோறும் பெண் உனது ஆற்றலை தனித்து நிற்கும் உன் செம்மையை எங்களுக்கு அருள்வாய் என்று வேண்டுகிறார்களா? கயமையும் மோசடியும் நிறைந்த இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தில், அஞ்சியஞ்சி ஒழுக்கத்துக்கும் கற்புக்கும் ஊறு வராமலிருக்க வேண்டுமே என்று சாகாமல் செத்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு, இந்த மூடக் கட்டுப்பாடுகளையும் மூத்த பொய்மைகளையும் உடைத்தெறிய வல்லமை தா என்று வரம் நாடி வருகின்றனரா? இந்த வரங்களெல்லாம் கேட்கவும்கூட, அவர்கள் தாங்களாகச் சிந்திக்க வேண்டுமே?. இவர்களை இந்த வழிபாட்டைச் செய்ய ஆணை யிட்டிருப்பவர்கள், காவியுடைச் சாமியார்களோ, தாடி மீசை, உருத்திராட்சப் பூசாரிகளோ தாமே? ஆறு வாரம் எலுமிச்சை விளக்கேற்றுங்கள்; அதற்குள் மங்கள மஞ்சள் ஏறத் திருமணம் நிச்சயமாகும். ஆறு வாரம் அம்பாள் சந்நிதியில், மஞ்சள்சரடு கொண்டு கட்டுங்கள், உங்கள் புதல்வியின் கழுத்தில் மஞ்சள்சரடு தவழும். இராகுகாலப் பூசை, அபிசேகம் செய்யுங்கள், உங்கள் போக போக்யங்களை அநுபவிக்க ஒருவன் வந்து குதிப்பான்! அம்மன் சந்நிதிகளில் எத்தனை மஞ்சள்சரடுகள்? எனது, உடல் உள்ளம், திறமை, பொருள், எல்லாவற்றின் மீதும் ஒர் ஆணின் முடிச்சு இறுகட்டும்; அவன் ஆதிக்கம் என்னைச் சிறைப்படுத்தட்டும், என்னை ஒர் ஆண் குழந்தைக்குத் தாயாக்கட்டும்.கண்களை மூடிக்கொண்டு, மூடத்தலத்திலேயே இவர்களை வழிநடத்திச் செல்வதில், சமயச் சக்திகள் விழிப்புடன் இருக்கின்றன.