பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம கருஷணன ? 47 காரணத்துக்கான சூர்யாவை வென்று அவளைத் தம் தேரில் வைத்து ஒட்டிச் செல்லும் உரிமை பெற்றதாகவும் குறிக்கப்படுகிறது. சூர்யாவின் கையைப் பற்றிய ஆண் ஒரே தேவனா என்பது பற்றிய தெளிவான விவரமில்லை. இவளை கேட்டுப் பல தேவர்கள் வருகின்றனராம். சூரியனின் ஒளியைச் சந்திரனும் அந்தி சந்தி நேரங்களும் பெறுவதாகிய இயற்கையின் எழிலார்ந்த கோலங்களே இந்தக் கூட்டுப் பாடல் தொகுப்பில் உருவகங்களாயிருக்கின்றன. இந்திராணி என்ற பெயரை இன்றளவும் அதிகாரத்துக்கும் செல்வத்துக்கும் உரிய பெண்ணுக்குரியதாகக் குறிப்பிடு கிறோம். இவள் தேவர்களின் தலைவனாகிய இந்திரனின் தன்னிகரற்ற மனைவியாம். இங்கே நாம் குறிப்பிடத் தகுந்த சிறப்பு, இந்திரனின் ஆற்றல்களுக்கும் மேன்மைகளுக்கும் இவளே காரணமாகிறாள் என்ற தனித்தன்மைதான். ஆணைச் சார்ந்து இவள் மேன்மை பெறுகிறாள் என்றில்லாமல், இவள் தனித்துவம் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய தெய்வீக வடிவங்களைத் தவிர, வாழ்க்கையின் இன்பத்துக்கும் உயரிய நலன்களுக்கும் இலட்சியங்களாகக் கூடிய பல்வேறு கூறுகளைத் தெய்வங்களாக உருவகப் படுத்தப்பட்ட பாடல்களும் வருகின்றன. சிரத்தா-(சிரத்தை) அநுமதி (தெய்வ அருள்) அரமதி (உலகியல் ஞானமாகிய விவேகம்) தம்பதி (ஆணும் பெண்ணுமாக இசைவதனால் பெறும் கூட்டான ஆளுமை ஆற்றல்) ப்ரஷ்னி (புயல் மேகம்) அரண்யானி (கனிகளும் வளங்களும் புரக்கும் வனதேவதை' எவருக்கும் தீங்கிழைக்க மாட்டாள்) வருனானி அகன்யாணி (வருணன், அக்னி தேவரின் மனைவியர்) எலிந்து, கங்கை, ஸரஸ்வதி ஆகிய நதிகள் என்று தேவதைகளின் வரிசை நீண்டு செல்கிறது. இறுதியாக "அப்ளலரஸ்’ என்ற வருக்கத்தினரைப் புகழும் பாடல்கள் குறிப்பிடத் தகுந்தவை. அப்ஸரஸ் என்றாலே நீர்