பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 காலந்தோறும் பெண் மீது உலவித் திரிபவர் என்று பொருள்படுகிறது. ஐந்து பாடல்களில் இந்தத் தேவ மங்கையர் போற்றப்படுகின்றனர். இந்த எழில்மிகு நங்கையரை உழைப்பும் மூப்பும் சாக்காடும் துன்பமும் உடைய மண்ணுலக மானுடருடன் தொடர்பு படுத்தாமல் ‘கந்தருவர்” என்ற இனத்தாருடன் தொடர்பு படுத்தியிருப்பதைக் குறிப்பிட வேண்டும். 'ஒ! அவனுக் கென்ன கந்தருவன் போல் இருக்கிறான்!” என்றால் அழகு, இளமை, கவலையறியாது சுகபோகங்களில் துய்த்தல் என்ற கூறுகளே முதன்மையாக்கப்படுகின்றன. ஆணும், பெண்ணும் சாவு, மூப்பு, வறுமை என்ற துன்ப நிழல் படாத நிலையில் எந்த விதிக்கும் கட்டுப்பட வேண்டிய கட்டாயம் இல்லாமல் இன்பம் துய்ப்பதை ஒர் இலட்சியக் கனவாக வைத்து, கந்தருவர், அப்ஸரஸ்-கள் என்று கற்பிக்கப்பட்ட வடிவங்கள் என்று கொள்ளும்படி இவர்களுடைய சித்திரங்கள் அமைந்திருக்கின்றன. அப்ஸ் ர நங்கையர், ஆடல் பாடல்களிலும் களியாட்டங்களிலும் வல்லவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்குப் புதல்வரைப் பெறும் உரிமைகள் உண்டு. வளலிஷட மாமுனி ஊர்வசி என்ற அப்ஸரஸின் மைந்தராக விவரிக்கப்படுகிறார். ருக்வேதத்தில் ஊர்வசிக்கும் மண்ணுலக மன்னன் புரூரவனுக்குமிடையே உள்ள காதலை அழகிய பாடல்கள் சித்திரிக்கின்றன. உரையாடல்களுடன், நாடகப் பாணியில் அமைந்த இப்பாடல்களே, பிற்காலத்தில் காளிதாசன் தனது புகழ்பெற்ற விக்ரமோர்வசிய நாடகத்தை உருவாக்க வழிவகுத்தன o Toy Tool)ГГІ Г). பெண்மை என்ற முழுமையில் விகசிக்கும் தாய்மைக்குரிய அரிய இயல்புகள், மகள், மகளாக அவள் வாழ்வின் எல்லா இயக்கங்களிலும் ஒன்றி மலர்ச்சியைக் கூட்டுதல், ஞானமும் அறிவுச் செம்மையும் இவளுக்குச் சிறப்பான அம்சங்கள். அறிவின் தேட்டமும் ஆன்மீக உயர்வும் இவளுக்கே உரியன என்ற நிலைகள், வாழ்க்கையின் இன்றியமையாத போகங்கள்.