உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன் 57


"ஆ...சட்டம் பார்த்திண்டு நிறுத்தினாத்தான் எல்லாம் தாறுமாறாப் போறது. காலாகாலத்துல பெரியவளாகும் முன்ன கல்யாணம் பண்றது தர்மம்னு எங்கப்பாம்மா ஒரே புடியா இருந்தா. மடத்துல ரொம்ப ஈடுபாடு. நெருக்கம். ஆசாரிய சுவாமிகள் ஆசீர்வாதம் பண்ணி, கூறையும் தாலியும் குடுத்தா. கல்யாணத்தின்போது அவருக்குப் பதினெட்டு வயசு. எஸ்.எஸ். எல்.ஸி. பாஸ் பண்ணிட்டு டைப் அடிச்சிட்டிருந்தார்... அவா. வீட்டிலும் ரொம்ப ஆசாரம்...ஆனா, குழந்தை பிறந்த உடனே குழந்தையையும் யாரும் வச்சுக்க மாட்டேன்னுட்டா. அவருக்கு இருநூறு ரூபாதான் சம்பளம். நான் படிச்சுத்தான் வேலை செய்யணும். கஷ்டம் எத்தனையோ...ன்னாலும், குலாசாரம் விடலன்னு ஒரு திருப்தி...” என்று மூச்சு விடாமல் பொரிந்தாள்.

"இவள் படிக்கிறாளா?”

"ம்; ஆறாவது முடிச்சு ஏழாவது போறா; அவன் ப்ளஸ்-டூ போகணும். போதும் படிச்சதுன்னுட்டா. அவா வீட்ல கடை ஓட்டல் ரெண்டு நடத்தறா. ஆச்சு, ஏதேனும் ஒண்ணுல உட்கார இந்தப் படிப்புப் போதும்னுட்டா. இவளை, வேணுன்னா படி, இல்லாட்டா வேண்டாம்னா. என்னைப்போல வேலை செஞ்சுதான் சம்பாதிக்கணும்னில்ல. ஏதோ எட்டோ பத்தோ படிக்கட்டும், பெரியவளாயி குழந்தை குட்டின்னு ஆனா, தன்னால வீட்டிலதானே இருக்கப் போறா. அதுவரை ஸ்கூலுக்குப் போகட்டும்னேன்.”

எனக்கு எந்தக் காலத்தில் இருக்கிறோம் என்று ஒரு கணம் தடுமாற்றமாக இருந்தது.

"குங்குமம் கொடுங்கள். நேரமாகிறது. அவருக்குச் சனிக்கிழமை லீவு. அடுப்பில் குழம்பு வைத்துவிட்டு ஓடி வந்தேன். சமையலை முடிச்சிட்டு அவருக்கு எல்லாம் பரிமாறி எடுத்துவச்சுட்டு நான் ஸ்கூலுக்கு ஓடணும். குழந்தைகள் இரண்டும் ரகளை பண்ணிண்டிருக்கும்." நான் குங்குமத்தை நீட்ட,