பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. வருண பேதங்கள் "அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி’ என்று முகப்பைத் தாங்கிய வாயிலுள் பஞ்சையாகத் தெரியும் தொழிலாளத் தாய் ஒருத்தி தன் பன்னிரண்டு வயதுச் சிறுமி யைக் கூட்டிக் கொண்டு நுழைகிறாள். நுழைவுக்கான தேர்வு முடிந்து, பணம் கட்டிப் பெயர்ப் பதிவு செய்ய வேண்டும். நீண்ட மேசையைச் சுற்றிப் பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் ஆதரவாளர் என்ற நிலையில் அரசுத் தொடர் புடையோர் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். இந்தப் பஞ்சையான தாயைப் பார்த்ததும், "ஏம்மா அப்பாவைக் கூட்டிட்டு வந்துதான் சேர்க்கணும்னு சொன்னமில்ல? நீ மட்டும் வந்தா எப்பிடி?... போயி அப்பாரை இட்டுட்டு வா!...” என்று சொல்கிறார்கள். தாய் பதிலேதும் சொல்ல முடியாமல் விழிக்கிறாள். அப்பன் உயிருடன் இருக்கிறான். ஆனால், அவன் தொழிலுக்குப் போயிருப்பது காரணமாகாது. தன் பெண் படிக்க வேண்டும் என்று ஆசையும், அன்பும், குடும்பப் பொறுப்பும் உள்ள தந்தையாக இருந்தால், எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றுவான். இவனோ “பொட்டக்கயிதக்கி இன்னாடி படிப்பு? நாலு காசி சம்பாரிச்சிட்டுவரத் தெருத்திவுடு!” என்று திருவாய் மலரும் வர்க்கத்தினன். அத்துடன், மகள் சம்பாத்தியமும் சேர்ந்தால், கள்ளுக்கடைக்குச் செல்லத் தட்டில்லாமல் வருமானம் கிடைக்கும் என்று எண்ணும் குடித்தலைவன்’ “அவருக்கு வரச் சவுரியப்படாதுங்க-” என்று தாய் தயங்கி விழிக்கிறாள். “சவுரியப்படாதுன்னா எப்படி? அப்பாரு வந்துதான் கைநாட்டுப் போட்டு இஸ்கூல்ல சேர்க்கணும்” என்று விதியை எடுத்துரைக்கிறாள் தலைமை ஆசிரியை.