பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 காலந்தோறும் பெண் தியாக உணர்வைப் பாராட்டும் வகையில் இளம் ஆசிரியர் பேசிக்கொண்டு இருந்தார். o “பொம்பளைங்க எதுக்கு நெத்தியிலே சிவப்பு பொட்டு வைக்கறாங்க? அவங்க தியாகம் பண்ணுறவங்க, சிவப்பு பொட்டு தியாகத்தின் லட்சியம் லட்சணம், இந்தியப் பெண்கள் தியாகத்துக்கு இருப்பிடங்கள். ஆம்பிள எப்படி எப்படியோ இருக்கலாம்; ஆனா பொம்பளைங்க தியாகத்துக்கே பிறக்கறாங்கங்கறதை வலியுறுத்தத்தான் குங்குமப் பொட்டு அவங்களுக்கே என்று வைக்கறாங்க- வைக்கணும்.” இவ்வாறு அடித்துக் கூறிவிட்டு, மீசையை நீவிக் கொண்டு சுற்றும் முற்றும் பெருமையுடன் பார்த்துக் கொண்டார். முதியவர் தோல்வியை ஒப்புக்கொண்டு, இளம் நண்பரின் அறிவுக்குத் தலை வணங்கினார். வண்டிக்குள் இருந்த எந்தப் பெண்மணியும் (நானும்தான்) தியாகம் செய்ய நாங்கள் பிறவி எடுக்கவில்லை என்று சீறிக் கொண்டு எழுந்திருக்கவில்லை. சிவப்புப் பொட்டுக்கு இத்தகைய அடிப்படைப் பொருள் உண்டு என்ற கருத்து என்னுடன் பல்வேறு வினாக்களை உலுக்கிவிட்டதுதான் காரணம். என்னுடைய அன்னையின் வயது முதிர்ந்த தாய் அந்த நாட்களில் சில கேள்விகளைக் கேட்பதுண்டு. அவற்றுக்கு அவர் விடைகளை எதிர்பார்த்த தாகத் தெரியவில்லை. அதற்காக வினாக்களை வெளி யிடாமல் இருந்ததுமில்லை. அவர் தமது முப்பத்தைந்து வயதில் கைம்பெண்ணாகிப் பல ஆண்டுகள் முடியற்ற தலையை மூடிக் கொண்டு வெள்ளைச் சேலையும் ரவிக்கையில்லாத மேனியுமாக வாழும் மரபைக் கடைப்பிடிக்கும் கட்டாயத்தில் வாழ்ந்தவர். எண்பதைக் கடந்து அவர் வாழ்ந்த நாட்களிலும் முடி முற்றிலும் வெண்மையாகிப் போய்விடல்லை. “தலை பண்ணிண்டா இன்னும் வண்டா விழறது. சவம்” முடியை நாவிதர் வழிக்கும் போது அந்தக் கழிவு கருவண்டு போல் இருக்கிறதாம்! என்பார்.