பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 85 “புருஷன்காரன் தாலியையும் மடிசார்க் கட்டையும்தானே கொண்டு வந்தான்? அதைத் தொலைச்சிட்டுப் போகட்டும். தலை மயிரையும் குங்குமத்தையும் எதுக்கு விடணும்?” எதற்கு விட வேண்டும்? தலைமுடி இந்நாட்களில் மீட்கப்பட்டிருக்கிறது. ஆனால் குங்குமத் தீண்டாமை ஏன் தொலையவில்லை. ஒ! புருவ மத்தியில் குங்குமம் எதற்காக வைக்க வேண்டும் பெண்கள்? அங்குதான் மூலாதாரமான அவன் சக்தி நிலைகொண்டு இருக்கிறது. அந்த இடத்தை உற்றுநோக்கி எந்த ஆண் மகனும் அவளை வசியம் செய்ய முடியாது. குங்குமப் பொட்டு கவசமாக வீற்றிருந்து அவள் கற்பைக் காக்கின்றது என்ற விளக்கமும் கொடுக்கப்படுகிறது. அதுசரி, அப்படியானால் புருஷன் இறந்த பிறகு அவளை எவரும் வசியம் செய்ய இடமுண்டு என்றுதானே பொருள் படுகின்றது? புருஷன் இல்லாதபோது குங்குமமில்லை. எனவே இன்னொரு திருமணம் புரிந்துகொள்வதற்கும் தடை இருக்கக் கூடாதே! இப்படி எதிர்க்கேள்வி விடுத்தால் சனாதன மரபுக் குடுக்கைகளுக்குப் பேரதிர்ச்சியாக இருக்குமே? அதற்குத்தான் எல்லாம் எரிந்து பொசுங்கிவிட்டதென்று பொருள்படும் திருநீற்றைத் தரிக்கச் செய்கிறார்கள். எது எப்படியெனினும் குங்குமம் விடுக்கும் புதிர்கள் திருப்திகரமாக விடுவிக்கப்படவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது. முன்னுச்சி வகிட்டில் கோடாகத் தீற்றப் பெறும் சிந்துார அடையாளத்துக்கும், புருவ மத்தியில் நெற்றியில் அலங்கார மங்கலமாக வைக்கப் பெறும் குங்குமத் திலகத்துக்கும் அடிப்படைத் தொடர்பு உண்டா? இது இன்னமும் ஆராய்ச்சிக்குரியதாகவே இருக்கிறது.