பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடோரசித்தன் கதை

19


இன்றியும் கரையோரத்தில் நின்ற பைசாசங்கள் எல்லாம் ஒவென நகைத்தன.

காட்டு வழியிற் செல்லும்போது புலியடித்தும், பாம்பு கடித்தும் இறந்து பைசாசமாயின சில. கப்பல் கவிழ்ந்து கடலிடை வீழ்ந்து முழுகி இறந்து பைசாச மாயின சில. ரகசியமாகக் கொலையுண்டு கழுகுக்குங் காகத் துக்கும் உடலம் உணவாகிப் பைசாசமாயின சில. இவ் வண்ணம் பல்லாற்றானும் தகிப்பாரின்றிப் புதைப்பாரின்றி, ஆற்றைக் கடந்து செல்ல இயலாது ஆற்றங் கரையிலேயே வருடக் கணக்காய் நின்று காத்திருந்த பைசாசக் கூட்ட மெல்லாம் கடோர சித்தப் பேயின் வேடிக்கைப் பேச்சில் இன் புற்று ஆரவாரஞ் செய்து கொண்டிருந்தன. இந்தப் பேய்களின் பேரிரைச்சல் ஆற்றுக்கு அக்கரையில் யமதருமராஜரை வேலை செய்ய ஒட்டாது தடுத்தது. தரும ராஜரும் கோபித்து “இஃதென்ன பேரிரைச்சல் ஆற்றுக்கு அக்கரையில்?” என வினவினர். அப்போது அங்கிருந்த ஒரு தூதன் “சுவாமி! ஆற்றுக்கு அக்கரையில் உள்ள பேய்க் கூட்டங்களின் நடுவில் கண்ணபுரத்திலிருந்து கடோரசித்தப் பேய் எனும் ஒரு விருந்து வந்திருக்கிறது. அந்தப் புதுப்பேய் ஏதேதோ வேடிக்கையாகப் பேசி எல்லாப் பேய்களையுஞ் சிரிக்கச் செய்கிறது.” தோணிக்காரனைக் கூடப் பரிகசித்து ஏளனஞ் செய்ய அவன் “எனக்கு இந்த வேலை போதும் போதும்; தருமராஜா இந்தப் புதுப் பேயின் கொழுப்பை அடக்காவிட்டால் இந்த ஒடத் துடுப்பை முறித் தெறிந்து வேலையையும் விட்டு விடுகிறேன்” எனக் கூறி அழுகின்றான் என்றனன்.