பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடோரசித்தன் கதை

25

னின்று, உருண்ட ஒரு பெரிய கல்லை உருட்டிச் செல்கின்றது. உச்சியில் சேருஞ் சமயத்து அக்கல் உருண்டு கீழே விழுந்து விடுகிறது. பின்னர், அந்தக்கல்லை உச்சிக்குக் கொண்டு போகின்றது; மறுபடியும் அக்கல் கீழே உருண்டு விழுகிறது: அக்கல்லை இப்படி உச்சிக்கு ஏற்றுவதும், அது உருண்டு உச்சியினின்று கீழே விழுவதும், மறுபடியும் உச்சிக்கு அக்கல்லைக் கொண்டு போவதும் தான் அப்பேய்க்கு வேலையாம். என்றைக்கு அந்தக்கல் மலை உச்சியில் நிலைத்து நிற்குமோ அன்றுதான் நரக தண்டனை முடிவு பெறுமாம். கடோரசித்தப் பேய் அத்துன்பத்திற் சிறிதேனும் கவலை யடையாமற் பாடிக்கொண்டே வேலை செய்து கொண்டிருக்கும் போது நரகலோக காட்சிகளைக் காண நாரத முனிவர் ஒருமுறை சென்றனர். பலவித தண்டனைகளில் உயிர்கள் படும் பாடுகளைக் கண்டனர். ஈற்றிற் கடோரசித்தப் பேய் பாடும் பாட்டு இவர் காதிற் கேட்டது. இஃதென்ன! விந்தையிலும் விந்தை! ஆனந்தமான பாடல் இவ்விருள்குழ், நரகிடையே கேட்கின்றதே என ஆச்சரியப்பட்டுக் கடோர சித்தப்பேய் பாடிக்கொண்டு வேலை செய்யும் இடத்துக்குச் சென்றனர். அப்போது அந்தப்பேய்.

1. அறிவுக்கே ஆக்கமென் றுருளாய் கல்லே!
அறிவிலார்க் கேக்கமென் றுருளாய் கல்லே!

2. புத்திக்கே யோகமென் றுருளாய் கல்லே!
புத்திக்கே போகமென் றுருளாய் கல்லே!

3. உள்ளதைக் கற்கவே உருளாய் கல்லே!
உச்சியில் நிற்கவே உருளாய் கல்லே!

4. என்றுமே இன்பமென் றுருளாய் கல்லே!
எங்குமே இன்பமென் றுருளாய் கல்லே!