பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

காலனைக் கட்டி யடக்கிய


எனப் பாடிக்கொண்டிருந்தது. இங்ஙனம் பாடுவதையும் கல் உருண்டு கீழே விழுவதையும் மறுபடியும் பாடிக் கொண்டே கல்லை உச்சிக்குக் கொண்டு போவதையுங் கண்ட நாரத முரிவர் ஆச்சரியப்பட்டு “யாரப்பா நீ! மிக இனிய குரலுடன் பாடி இவ்விருண்ட நரகிடை இன்பந் தருகின்றாய்?” என வினவினர். அதற்கு அப்பேய் “பூலோகத்தில் நான் வாழ்ந்தபோது எனக்குக் கடோரசித்தன் என்று பெயர். இவ்விருள் நிறைந்த நரகிடை வந்தும் பூவுலகிலிருந்த என் புத்தியைக் கைவிடாது, துன்பமே இன்பம் எனப்பாராட்டி வருகின்றேன். இந்நரகிடை என்னை விசாரணை செய்த தருமராஜர் எனக்கு “ஓயா வேலை” என்னும் பெரிய தணடனையை விதித்தனர். வேலை இன்பம் பயக்கும். என்று அவர் அறியார் போலும். பூவுலகில் தண்டனை யடைந்தோர் விலங்கு பூண்டிருந்தும் சிறைச்சாலையில் வேலை செய்யும்போது பாடிக் கொண்டு காலங் கழிப்பதை எங்கள் தருமராஜா பார்த்ததில்லை போலும்” என்க் கூறி நகைத்தது. அதற்கு நாரதர் “பூலோகத்திற் சிறையுற்றோர் பாடுகிறார்கள் என்றாயே, ஒரு காலத்தில் தமது தண்டனை முடிவு பெறும் என்னும் உணர்ச்சி அவர்களுக்கு உள்ளபடியால் அவ்வேலை அவர்களுக்கு இன்பமாகத் தோன்றி அவ்ர்கள் பாடுகிறார்கள். உனக்குத்தான் முடிவுபெறாத வேலையாயிற்றே! உனக்கு எப்படி இன்பம் உண்டாகும்?” என்றனர். அதற்கு “இந்தக்கல் உச்சியில் சேர்ந்து நிற்கும் என எனக்கும் ஒரு உணர்ச்சி இருக்கிறது. உச்சியில் சேர்ந்ததும் உலவா இன்பம் எனக்குக் கிட்டுமல்லவா?” என்றது அந்தப்பேய்.உச்சியில் சேர்ந்து நிற்காவிட்டால் உன் கதி என்ன என