பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

காலனைக் கட்டி யடக்கிய


எழிலி வடிவினர் “கடோர சித்தன் ஒருவன், முறையிடுவோர் பலர்; ஒருவனை வெல்லும் ஆற்றலில்லாத அந்த அறிவிலிகளுக்கு நான் இரங்கேன். அறிவுயாண்டுளதோ ஆண்டுள்ளேன் நான்; பிறிதிடஞ் சேரேன்” என விடை பகர்ந்தனர். நன்றே எனக் கூறிச் செங்கமல மலர் மாதுங் கம்மென்றிருந்தனள்.

இங்கனம் பல நாள் முறை யிட்டனர் பாருளோர். மதுசூதனரும் புன்னகையுடன் சும்மா இருந்தனர். யாருக்கும் அடங்காக் கடோர சித்தனுடைய கொடுஞ் செயல்கள் விருத்தியுற்றன. அவன் கொள்ளை கொள்ளாத வீடே கிடையாது. அவனுக்கு அஞ்சாத உயிரே கிடையாது. “ஆசைக்கோரளவில்லை அகிலமெல்லாங் கட்டியாளினும்” என்ற பெரியார் வாக்கு பொய்க்குமோ! கடோர சித்தன் “இனி நாம் கொள்ளையிடப் பாக்கியாய் நிற்பது இக் கண்ணபுரத்திலுள்ள கருடகேதனன் திருக்கோயிற்பொருள்களே” என நினைத்தனன். கோயிலைச் சார்ந்த பசுக்களை முதலிற் கவர்ந்தனன். பின்னர் கோயிலாபரணங்களை வெளவினன்; பின்னர், தங்க ஸ்தூபிகள் முதலியவற்றைத் தகர்த்தெடுத் தனன். பார்த்தனர் பெருமாள் ! “நன்று! நன்று! நான் வாளா இருந்தது போதும். எனக்கே வழிவைக்கின்றான் இந்தக் கடோர சித்தன்” - என நகைத்துக் கடுநரகாளும் தருமராஜனை நினைத்தனர். தருமனும் எதிர்தோன்றி வணங்கினன். “கண்ணபுரத்துக் கடோர சித்தனை இன்றே கொல்லுக, இன்னே கொல்லுக. இன்றேல் எனக்கு இரக்கம் வரக்கூடும். யான் இரங்குமுன் அவனை அடக்குக.” எனக் கட்டளை யிட்டனர் கமலக் கண்ணரும். நன்றென