பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

காலனைக் கட்டி யடக்கிய


லாமே” என்றனன். காலனும் “இதேது புதுமை, எங்கும் நம்மைத் தூஷிப்பதற்குத்தான் மனிதர்களுண்டு. இவன் என்ன இவ்வளவு அன்பாய் உபசரிக்கின்றனனே” என மகிழ்ந்து கடோர சித்தன் காட்டிய நாற்காலியில் அமர்ந்தனன்.

அமர்ந்த அந் நிமிஷமே அந்த அற்புத இரும்பு நாற்காலியி லிருந்து நூற்றுக்கணக்கான இரும்பு கம்பிகளைப் போன்ற வலிய கம்பிகள் எழும்பின. அவை காலனை நாலா பக்கங்களிலுஞ் சுற்றி வளைத்துச் சுருக்கிட்டழுத்திப் பாய்ந்து முறுக்கி யிறுக்கிப் பிணித்தன. வலையிலகப்பட்ட மான் போலப் போக்கிட மற்றுக் கலங்கினன் காலன். இதைக் கண்டனன் கடோர சித்தன். “அன்பரே! கூப்பிட்டீர்களே. வாருங்கள் போவோம்; நான் வர சித்தமாயிருக்கின்றேன். ஏன்! எழுந்து வரலாமே” என்றனன். காலனுக்கு இருந்த இடத்திலிருந்து அணு அளவு கூட அப்படி இப்படி அசைய முடியவில்லை, கடோர சிந்தனை நோக்கிக் கோபிப்பான், வேண்டுவான், வெருட்டுவான், துதிப்பான். கள்ளனோ புன்னகையுடன் ‘அப்பா! ஒருவன் வாழ்நாளுக் கெல்லாம் ஒரே முறை வரும் விருந்தாளி யாயிற்றே நீ, உன்னை நான் உபசரியாமற் புறக் கணிக்கலாமா? சற்று நிதானியும் அன்பரே. ஒரிடத்திலிருந்து உண்டு மகிழ்ந்திருத்தல் சுகமா, அல்லது அங்கேயும் இங்கேயும் அலைந்து அவத்தை யுறுவது நலமா? இந் நிமிஷம் ரண களத்திலிருக்கின்ருய் மறு கிமிஷம் வைசூரி, குட்டம், நீரிழிவு, காமாலை, சுரம், பேதி முதலிய நோய்களிடையே யிருக்கின்றாய். கொந்தளிக்குங் கடலினிடையே