பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழுடன் ஆங்கில உறவு 1 1 3 என்ற நிலைக்கு ஒரு திட்டமாக ஒழுங்குபடுத்தி நூல் களாக எழுதி வைக்கவில்லை என்று உறுதியாகச் சொல்லி விடலாம். இன்று ஆங்கிலத்தில் இத்துறைகள் யாவும் வியத்தகு முறையில் வளர்ச்சியடைந்துள்ளன. பெளதிகம் வேதியியல், நில இயல், உயிரியல், தாவர இயல், பொறி யியல், வானநூல், கணிதம் ஆகியவற்றில் ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. அவைகளை யெல்லாம் தமிழர் அறிந்துகொள்ள வேண்டாமா ? அந்நூல்கள் எல்லாம் தமிழில் மொழிபெயர்க்கப்படுதல் வேண்டும் என்பதை எவராவது மறுப்பார்களா ? அந்நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெறும்பொழுது புதிய கலைச் சொற்கள் தமிழில் உண்டாகவேண்டாமா ? இன்றி யமையாத இடங்களில் ஆங்கிலச் சொற்களே அப்படியே ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்? தமிழின் நீர்மைக் கேற்றவாறு ஒலி வடிவு கொடுத்து ஏற்றுக்கொண்டால் அதல்ை என்ன குறை நேர்ந்துவிடும்? இவை போன்ற வற்றை யெல்லாம் நன்கு சிந்திக்கவேண்டும். ஆங்கிலேயர்கள் நமது நாட்டிற்கு வந்த பிறகுதான் ஆங்கிலத்தின் உறவு தமிழுக்குக் கிடைத்தது. ஆங்கி லத்தின் உறவைத் தமிழ் பெற்ற பிறகு அது பல துறை களிலும் வளமடைந்துள்ளது என்பதை எவர்தான் மறுக்க முடியும் ? முதலாவது: தமிழ் ஆங்கிலமொழித் தொடர்பைப் பெறுவதற்கு முன்பு தமிழில் உரைநடை நூல்களே இல்லை. சிலப்பதிகாரம் போன்ற உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் நூல்களிலும், இறையனர் அகப்பொருள் உரை யிலும், நச்சிளுர்க்கினியர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர்கள் எழுதியுள்ள உரை நூல்களிலும், ஆங்காங்கு அத்தி பூத்தமாதிரி காணப் படும் உரைநடைகளைத் தவிர வேறு தனி உரைநடை 47—9